சற்று முன்

இசைஞானியின் ஆசியுடன் புதிய படத்தை பூஜையுடன் துவக்கினார் இயக்குநர் பாரதி கணேஷ்!   |    'ஜென்டில் மேன்-2' மூலம் மீண்டும் தமிழில் இசையமைக்கும் ஆஸ்கர் வின்னர்  இசையமைப்பாளர்!   |    #Nikhil20 படத்தின் தலைப்பு 'சுயம்பு' என வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட லுக் வெளியாகியுள்ளது!   |    என்னை பெண்ணியவாதியா என்று கூட கேட்டார்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ்   |    மிரள வைக்கும் மோஷன் வீடியோவுடன் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!   |    கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் 'ஜப்பான்' படத்தின் சிறப்பு டீசர் வெளியீடு!   |    55வது பிறந்தநாளில் ஒரு முதிய பெண்மணியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ரகுமான்!   |    35 ஆண்டுகளாக நான் காளி வேடம் போட்டேன் - நடிகர் டி. குமரன்   |    சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!   |    மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்கும் 'உன்னால் என்னால்'   |    பல நாட்டு திரைத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ONE திரைப்படத்தின் டிரைலர்   |    “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    தளபதி விஜய்யுடன் 68-வது படத்திற்காக அவருடன் இணையும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!   |    ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படத்தின் இசை வெளியீட்டு விழா!   |    ஐந்து மொழிகளைச் சேர்ந்த ஐந்து சூப்பர் ஸ்டார்கள் இணைந்து வெளியிடவுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷனில் 'கொட்டுக்காளி'   |    அஜித்குமாரின் நீண்ட கால விருப்பம்!   |    'ஃபுட்டேஜ்' படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் மிகப்பிரபலமான எடிட்டர்!   |    ‘ஷோபா’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் இதயங்களை கவந்திருக்கும் ‘மாடர்ன் லவ்' நடிகை !   |    தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்க இருக்கும் 'அஸ்வின்ஸ்'   |   

croppedImg_787638762.jpeg

‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ விமர்சனம்

Directed by : Dayal Padmanabhan

Casting : Varalaxmi Sarathkumar, Arav, Santhosh prathap, Mahat Raghavendra, Yasar, Vivek Rajagopal, Amit Bharghav, Subramanya Siva,Yash Shetty, Ravi Venkatraman, Shruthi Nayak, Joe Simon, Balaji, Chandra chud

Music :Manikanth Kadri

Produced by : D PICTURES, Dayal Padmanabhan

PRO : DOne

Review :

 

 

"மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்"  D Pictures  தயாள் பத்மநாபன் தயாரித்து இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு  இசை மணிகந்த் கத்ரி. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், மகத், அமித் பார்கவ், ஆரவ், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, யாசர், விவேக் ராஜகோபால் ஒன்றாக ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள். இதில்  போலீஸ் அதிகாரியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமாரும், மஹத் ராகவேந்திராவும் காதலிக்கிறார்கள். திடீரென மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் கட்டுக்குள் இருக்கும் பகுதியில் காணாமல் போன மஹத் ராகவேந்திரா கொலை செய்யப்படுகிறார். இதனை கண்டுபிடிக்க வரலட்சுமி சரத்குமார் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றல் வாங்கி வருகிறார். மஹத்தை கொன்றவர்களை கண்டுபிடித்த வரலட்சுமி சரத்குமார் அவர்களை கொள்ளப்போகும் சமயத்தில் வேறு ஒரு மர்ம கும்பல் அவனை கொன்றுவிடுகிறது. இதனை விசாரிக்க உதவி கமிஷனர் ஆரவ் நியமிக்கப்படுகிறார். இவரின் விசாரணையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தாரா? அவர்களை கொன்றது யார்? மஹத்தை கொன்றது யார்? கொலைக்கான காரணம்   என்ன? என்பதே "மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்" படத்தின் கதை. 

 

படத்தின் நாயனாக நடித்திருக்கும் ஆரவ் இடைவேளையின் போது வந்தாலும்  அவருடைய ஸ்கிரீன் பிரஷன்ஸ் மற்றும் கதாபாத்திரத்தை கையாண்ட விதம் என்று அனைத்து விதத்திலும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார். போலீஸ் உடையில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஆரவ், நடிப்பிலும் கம்பீரத்தை வெளிப்படுத்தி  கதாபாத்திரத்திற்கு மெருகு கூட்டி இருக்கிறார்.ஆரவுக்கு ஆக்‌ஷன் ஹீரோவுக்கான எல்லா தகுதியும் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறார். 

 

வரலட்சுமி சரத்குமார், தனக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும் ஒரே மாதிரியாக முக பாவனைகள் சலிப்படைய செய்கிறது. அவருக்கு அந்த வேடம் கச்சிதமாக பொருந்தினாலும், அந்த கதாபாத்திரத்திற்கான வேகம்  குறைவு. 

 

சந்தோஷ் பிரதாப்பிற்கு இந்த படத்தில் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கு போதுமான இடம் கிடைக்கவில்லை என்றாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நன்றாக நடித்துள்ளார். 

 

இசை மணிகாந்த் கத்ரி, படத்தின் பாடல்கள் ஒரு தடையாக இருந்தாலும் பின்னணி இசை சில இடங்களில் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. பரபரப்பான கொஞ்சம் திரில்லர் பாணியில் தான் இந்த படமும் உருவாகிறது. ஆனால், சில இடங்களில் அதிக லாஜிக் குறைபாடுகள் நடந்திருக்கிறது.

 

வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, விவேக் ராஜகோபாலன், யாசர், அமித் பார்கவ் என படத்தில் நடித்த அனைவரும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

படத்தின் பெரும்பாலான காட்சிகள் போலீஸ் ஸ்டேஷனை சுற்றி நடக்கிறது. ஆனால், போர் எதுவும் அடிக்கவில்லை .சலிப்புத் தட்டாத வகையில் தனது கேமரா கோணங்களால் அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா.


சில இடங்களில் அதிக லாஜிக் குறைபாடுகள் நடந்திருக்கிறது. அதேபோல் நண்பர்களுக்கு இடையான காட்சிகளும் பெரிதாக இல்லை. கதைக்களம் சரியாக இருந்தாலும் கதையை கொண்டு சென்ற விதத்தில் சொதப்பி இருக்கிறார்.

 

"மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : பார்க்கலாம்.

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA