சற்று முன்

பொள்ளாச்சி சம்பவங்களை ஏற்கனவே பதிவு செய்த இயக்குனர்   |    கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்திய இயக்குனர்   |    இயக்குநர் ஓகே செய்யாததால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த ரம்யா கிருஷ்ணன்   |    96 இயக்குனருக்கு விருது   |    ஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்   |    விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் எந்த பலனும் கிடையாது   |    மூன்று மொழிகளில் “உச்சகட்டம்”   |    முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகம்   |    'குச்சி ஐஸ்' படத்தின் தொடக்க விழா   |    அமெரிக்காவில் இயக்குனர் வஸந்தின் படம் தேர்வு   |    'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை   |    90ML ல் நடித்த தேஜ்ராஜ் யார் தெரியுமா   |    ரசிகர்களுக்காக உயிரை பணையம் வாய்த்த அஜித்   |    இசைக்கு D.இமான் கூறிய அழகு எது?   |    'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம்.   |    இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள்   |    ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம்   |    கடலை போடுவதென்றால் இதுதானா!   |    கேங்ஸ்டார்களின் வாழ்க்கை முறை பற்றிய கதை   |    விக்னேஷ் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவல்   |   

croppedImg_2018258518.jpeg

பியார் பிரேமா காதல் திரை விமர்சனம்

Directed by : இளன்

Casting : ஹரிஷ் கல்யாண்,ரைசா வில்சன்,ஆனந்த பாபு,ரேகா,ராஜா ராணி பாண்டியன்,பொற்கொடி

Music :யுவன் ஷங்கர் ராஜா

Produced by : YSR பிலிம்ஸ், K புரொடக்ஷன்ஸ்

PRO : மௌனம் ரவி

Review :

 

 

காதல், கல்யாணம், மனைவி, குழந்தை என வாழ்க்கையை நடத்த விரும்பும் ஒரு சராசரி மிடிஸ் கிளாஸ் இளைஞன் ஹரிஷ் கல்யாண். திருமண பந்தத்தில் நம்பிக்கையில்லாத பணக்கார அல்ட்ரா மாடர்ன் தேவதை ரைசா வில்சன்.

 

இருவரும் ஒரே அலுவலகத்தில்  வேலை செய்கின்றனர். ஹரிஷ் ரைசா வில்சன் மீது காதல் வயப்படுகிறார். தன் காதலை ரைசாவிடம் கூறுகிறார். இதில் உடன்பாடு இல்லாத ரைசா ஒருகட்டத்தில் ஹரிஷுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழலாம் என கூற.  இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் ஜோடியாக வாழ்கின்றனர்.

 

ஒரு கட்டத்தில் உடல் நிலை சரியில்லாத தன் தாய்க்காக திருமணம் செய்து கொள்ள ரைசாவை திருமணத்திற்கு சம்மதிக்கும் படி கேட்கிறார். அதற்கு தன் லட்சியத்தை காரணம் சொல்லி ரெய்சா மறுக்கிறார்.

 

இறுதியில்  ரைசா  திருமணத்திற்கு சம்மதித்தாரா? இருவரும் தங்கள் காதலை மறந்து விரும்பிய வாழ்க்கையை விரும்பியபடி வாழ்ந்தார்களா? ரைசா தன்னுடைய லட்சியத்தை அடைந்தாரா என்பது தான் கதை. 

 

"உனக்கு என்னை விட உன் லட்சியம் தான் முக்கியம்? உனக்கு என்னை விட உங்க அம்மாதான் முக்கியம் என இருவரும் சண்டைபோடும்போது   அவர்களுடைய நடிப்பில்  ஒரு யதார்த்தமான தம்பதியை  நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். 

 

 

ஹரிஷ் கல்யாண் ரைசா வில்சன் காதல் சொட்ட சொட்ட நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க இவர்களை சுற்றியே பியார் பிரேமா காதல்.

 

வாழ்க்கையின் யதார்த்தங்களை,உணர்வுகளையும், மட்டுமே சொல்லியிருக்கும் விதத்தில் தனித்து தெரிகிறார் இயக்குனர் இளன். 

 

ரைசாவின் தந்தையாக நடித்திருக்கும் ஆனந்த்பாபு மகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அதனால் மகளுக்கு ஏற்படும் தடுமாற்றங்களை சரி செய்யும் விதம் ஒரு தந்தைக்கே உரித்தான தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். 

ஹரிஷின் அம்மாவாக ரேகா. வழக்கம் போல் செய்யும் அம்மா கேரக்டர். சொல்லும்படி வேறெதுவும் இல்லை.  

 

படம் முழுக்க என்னதான் காதல் காட்சிகள் நிரம்பி வழிந்தாலும், அதற்க்கு இசை தான் உயிர் கொடுக்கும் என்பதை நிரூபித்துவிட்டார் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் யுவன்.

 

என்னதான் யுவன் தயாரிப்பாளர் என்றாலும் இந்த படத்தில் 12 பாடல்கள் என்பது மிக அதிகம். அதை சற்று யோசித்திருக்கலாம்.  

 

படத்தின் ஒளிப்பதிவும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது, 

 

சில இடங்களில் தெரியும் கூடுதல் விரசமும், டபுள் மீனிங்சையும்  சற்று குறைத்திருக்கலாம்.  

 

கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் என்பதை மீறி அட்வான்சாக காதலுக்கு முன்பே செக்ஸ் என சிந்தித்திருக்கிறார் இயக்குனர் இளம். என்னதான் காலம் மாறினாலும் லிவிங் டுகெதர் வாழ்க்கை என்பதே சற்று  நெருடலாக  தான் உள்ளது.

 


படத்தின் முடிவில் படத்தை முடிக்க வழி தெரியாமல் திணறுவது தெரிகிறது.

 


ஜெசி ஜாஸி 

 

Verdict : குடும்ப கதை ஆனால் குடும்பத்துடன் பார்க்க முடியாத படம்.

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA