சற்று முன்

முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி   |    ஜி வி பிரகாஷ் நடிக்கும் பிரம்மாண்டமான திகில் படம்   |    பன்றிக்கு நன்றி சொல்லி இயக்கிய பாலா அரன்   |    விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்   |    மக்களை வியக்கவைத்த அருவம் டீசர்   |    விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்   |    நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது - நடிகை லதா   |    கமல்ஹாசன் நாசருக்கு வாழ்த்து   |    ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சனி தோஷம் நீக்கும் ’சனி சாந்தி ஹோமம்’!   |    ஆர்வமாக காத்திருக்கிருக்கும் மனிஷாஜித்   |    போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் ஆர்.கே.சுரேஷ்   |    சுவையை கூட்டி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சைவ மற்றும் அசைவ உணவுகள்   |    அரவிந்த்சாமி நடிக்கும் டிடெக்ட்டிவ் திரில்லர் படம்   |    என் முகத்தை பார்த்துவிட்டு இது ஹோம்லியான கதபாத்திரமாச்சே என தயங்கிய இயக்குனர்   |    மதுரை தல ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான காரணம்   |    பாக்கியராஜ் மீண்டும் சி.ஐ.டி அதிகாரியாக களமிறங்குகிறார்   |    நடிகர் விமலும் இயக்குனர் சற்குணமும் செய்த சதி அம்பலம்   |    ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து நடனமாடிய படம்   |    வைபவை தெறிக்கவிட்ட வெங்கட்பிரபு   |    குஷ்பு தனது வாக்கை பதிவு செய்தார்   |   

croppedImg_192719381.png

விஸ்வரூபம் - 2 திரை விமர்சனம்

Directed by : கமல்ஹாசன்

Casting : கமல்ஹாசன், சேகர் கபூர், பூஜா குமார்,ஆண்ட்ரியா, ராகுல் போஸ்

Music :ஜிப்ரான்

Produced by : ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ஆஸ்க்கார் பிலிம்ஸ்

PRO : Diamond Babu

Review :

 

"விஸ்வரூபம் - 2' கமல்ஹாசன், சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோர்  உளவுத்துறையான 'RAW' என்ற அமைப்பின் அதிகாரிகள்  அமெரிக்காவில் இருந்து தப்பியோடிய உமர் என்ற தீவிரவாதியை தேடி வருகின்றனர். இதையறிந்த உமர், கமல் குழுவினர்களை கொலை செய்ய பலவித முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் பிரிட்டன் தலைநகரான  லண்டன் கடலில் செயற்கையாக பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்படுத்தி லண்டன் முழுவதையும் அழிக்க உமர் திட்டமிடுகிறார். 

 

ப்ளாஷ்பேக்கில் அல்கொய்தாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதியாக வருகிறார் கமல். ஆனால் உண்மையில் அவர் RAW அதிகாரி. தீவிரவாதிகள் திட்டத்தை எப்பிஐயுடன் சேர்ந்து கமல் எப்படி முறியடிக்கிறார் என்பது கதை.

 

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் ஐந்து வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. 

 

இந்த படத்தில் கமல் நன்றாக நடித்துள்ளார் என்பதைவிட அந்த கதையில் வாழ்ந்திருக்கிறார் என்று கூறுவது மிகையாகாது. 

 

"விஸ்வரூபம்" முதல் பகுதியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகளில் ஒருவராக வாழ்ந்து   அமெரிக்காவை காப்பாற்றிடும் கமல் "விஸ்வரூபம் 2" ல் , லண்டன் மாநகரை 1500 டன் ஹிட்லர் காலத்து வெடி பொருட்களில் இருந்து காப்பாற்றுவதோடு, 64 இந்திய நகரங்களை தீவிரவாதிகளின் வெடிகுண்டுகளில் இருந்தும் காப்பாற்றும் RAW உளவு அதிகாரியாக அமர்களப்படுத்தியிருக்கிறார். 

 

 

நளினம் மிளிரும் பெண்மை கலந்த பரதக் கலைஞராக வரும் கமல்  ஓடுவதும், ஆடுவதும், பேசுவதுமாக அவர் நடிப்பு அபாரம். தீவிரவாதிகளிடம் பிடிபட்ட சமயம் எந்த பதற்றமும் இன்றி கண்கள் சிமிட்டிச் சிமிட்டிச் சமாளிப்பதும் சாகுறதுக்கு முன்னாடி ஒரு தடவை பிரேயர் பண்ணிக்கிறேன்’ என்று தீவிரவாதிகளிடம் குழந்தைபோல்  விம்மி, அடுத்த நொடியில் அத்தனை பேரையும் பொளந்தெடுக்கும் அதிரடி நிகர் அவரே.

 

அவரது மனைவியாக வரும் பூஜா குமாருக்கு அவ்வளவாக வேலையில்லை என்றாலும், கமல் திடீரென விஸ்வரூபமெடுத்து ஹீரோ, வில்லன்களை அடித்து நொறுக்கும் நேரத்தில் தனது அப்பாவிக் கணவனா இப்படி என மருண்டு மிரளும் பூஜா தனக்கு கொடுத்துள்ள கதாபாத்திரத்தை கன கட்சிதமாக செய்திருக்கிறார்.

 

இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றும் அல்கொய்தா பயிற்சிப்பள்ளி, சீசியம் கட்டப்பட்ட கதிர்வீச்சுப் புறாக்கள் என வெளிச்சம் போட்டு கட்டியுள்ள இயக்குநர் கமல்ஹாசனுக்குப் பாராட்டுகள்.

 

ஆண்ட்ரியா கமலின் ஜுனியர் ஆபிஸர் அஷ்மிதாவாக நடித்திருக்கிறார்.  ஆண்ட்ரியாவுக்கு கொஞ்சம் அழுத்தமான காட்சிகளும், ஆக்சன் காட்சிகளும் உண்டு. சில காட்சிகளில் கமலை நடிப்பில் ஓவர்டேக் செய்திருக்கிறார். 

 

வில்லனாக ராகுல் போஸ் தனது கண்களில் தீவிரவாதத்தை பயங்கரமாக காட்டியிருக்கிறார்.ஆங்கிலத்தில் பேசியதற்காகத் தன் மகனையே நெற்றிப்பொட்டில் விரல் வைத்து அவர் 'சும்மானாச்சுக்கும்’ சுடும்போதே தன் கதாபாத்திரம் எவ்வளவு டெரர் என்பதை உணர்த்திவிடுகிறார். ''அப்பா இல்லாம வளர்ந்த பசங்க விவரமா இருப்பாங்க'' என்று தான் சொல்லியதற்கு, ''யார் அப்பான்னே தெரியாம வளர்ந்த பசங்க அதைவிட விவரமா இருப்பாங்க'' என்று கமலிடம் எதிரடி வாங்கும்போது கெத்து சிதறாமல் சிரிக்கவைக்கிறார்.

 

 

ஓளிப்பதிவு அருமை. எடிட்டிங் செய்தவர் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக செய்திருக்கலாம் 

 

ஜிப்ரானின் இசையில் இந்த படத்தில் "சாதி மதம் எனும் வியாதியை போக்கிட "மாயத் திருடன் காம கலைஞன் ... " நானாகிய நதி மூலமே' ஆகிய மூன்று பாடல்கள் உள்ளன. மூன்றுமே சூப்பர். குறிப்பாக 'நானாகிய நதிமூலமே' பாடல் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை. மேலும் இந்த படத்தில் ஜிப்ரான் பின்னணி இசை ஹாலிவுட் ரேஞ்சில் உள்ளது.

 

படத்தின் சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சில் படமாக்கப்பட்டுள்ளது. 

 

மற்றபடி ஆப்கானிஸ்தானையும், தலிபான்களையும் இவ்வளவு விவரமாக அமெரிக்கப் படங்களில் கூட பார்த்திருக்க முடியாது. ஆப்கானிஸ்தான் என்று படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் அப்படியே நிஜத்தை பிரதிபலித்திருப்பது போலிருக்கின்றன. இதுவரை தலிபான்கள் பற்றி செய்திகளாக, கட்டுரைகளாகப் படித்த அத்தனை விவரங்களையும் நுணுக்கமாக நம் கண் முன் வைத்திருக்கிறார் கமல்.

 

ஒளிப்பதிவாளர் கமலுக்கு ஏற்ப ஒத்துழைத்திருப்பது படத்திற்கு பெரிய ப்ளஸ்! 

 

மொத்தத்தில் விஸ்வரூபம் 1 படத்தில் இருந்து மீந்த காட்சிகளை எடுத்து "விஸ்வரூபம் - 2' ஆக தற்காலத்துக்கு ஏற்றாற்போல் கலவை சாதமாக தந்திருக்கிறார்.

 

ஜெசி ஜாஸி 

 

Verdict : ஆக்சன், தீவிரவாதம், காதல், செண்டிமெண்ட், நளினம் கலந்த படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA