சற்று முன்

இயக்குநர் ஓகே செய்யாததால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த ரம்யா கிருஷ்ணன்   |    96 இயக்குனருக்கு விருது   |    ஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்   |    விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் எந்த பலனும் கிடையாது   |    மூன்று மொழிகளில் “உச்சகட்டம்”   |    முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகம்   |    'குச்சி ஐஸ்' படத்தின் தொடக்க விழா   |    அமெரிக்காவில் இயக்குனர் வஸந்தின் படம் தேர்வு   |    'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை   |    90ML ல் நடித்த தேஜ்ராஜ் யார் தெரியுமா   |    ரசிகர்களுக்காக உயிரை பணையம் வாய்த்த அஜித்   |    இசைக்கு D.இமான் கூறிய அழகு எது?   |    'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம்.   |    இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள்   |    ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம்   |    கடலை போடுவதென்றால் இதுதானா!   |    கேங்ஸ்டார்களின் வாழ்க்கை முறை பற்றிய கதை   |    விக்னேஷ் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவல்   |    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் 'ஹவுஸ் ஓனர்'   |    பேயாக நடிக்கும் யோகி பாபு   |   

croppedImg_1173748514.jpeg

காலா திரை விமர்சனம்

Directed by : பா. ரஞ்சித்

Casting : ரஜினிகாந்த்,ஹுயூமா குரேஷி,சமுத்திரக்கனி,ஈஸ்வரி ராவ்,நானா பட்நேகர்

Music :சந்தோஷ் நாராயணன்

Produced by : தனுஷ்

PRO : Riaz K Ahmed

Review :

திருநெல்வேலியிலிருந்து தப்பித்து மும்பையில் தாராவி என்னும் இடத்தில் தாதாவாக வாழும் காலா. அந்த ஊர் மக்களின் நிலங்களை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் நில மோசடியாளர்களை எதிர்த்து நடத்தும் யுத்தமே காலா. 

 

ரஜினியின் கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித், ரஜினிகாந்திற்கே உரிய ஸ்டைலில் கனகச்சிதமாக பஞ்ச் டயலாக், பொழுதுபோக்கு, அனல் பறக்கும் வசனம் என பா. ரஞ்சித் அமர்களப்படுத்தியிருக்கிறார். 

 

முதல் பாதியில்  ஈஸ்வரி ராவிடம் செய்யும் ரொமான்ஸிலும் சரி அடுத்த பாதியில்  யூமா குரேஷிடம் செய்யும் ரொமான்ஸிலும் சரி ரஜினிக்கு 60 வயதா என யோசிக்கவைக்கிறது. 

 

இன்றைய மல்டிபிளக்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தக்க ரஜினியை காலாவாக உருவாக்கப்படுத்தியிருக்கிறார்  பா. ரஞ்சித்.  

 

மனைவியிடம் சிறு குழந்தையைப்போல் கொஞ்சுவதிலும் சரி தாதாவாக அனல்பறக்க வருவதிலும் சரி ரஜினியின் நடிப்பு அபாரம். 

 

அரசியல்வாதியாக வரும் நானே பட்கர் நடிப்பும் பாராட்டும் விதத்தில் உள்ளது. எப்பொழுதும் போல ரஜினிக்கே முக்கியத்துவம் உள்ள கதையாக உள்ளது. அனைத்து துணை நடிகர்களும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர். 

 

ரஜினியின் புகழ்பெற்ற அசைவுகளை விட்டுவிடாமலும், இப்போதைய ரசிகர்களை திருப்திப்படுத்தவும் ரஞ்சித் பெரும் முயற்சி எடுத்துள்ளார்.

 

பெரும்பாலும் குடிசை பகுதிகளை பின்னணியாக கொண்ட கதை.  

 

வெளியில் தமிழகத்தை போராட்ட பூமியாக மாற்றாதீர்கள் என்று கூறும் ரஜினி காலா படத்தில் மக்களுக்காக போராடுவது சிறிது முரண்பாடாக இருக்கிறது. 

 

படத்தின் முதல் பாதி சற்று மந்தமாக செல்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை சூப்பர். 

 

காலா படத்தில் ரஜினிகாந்த்தின் பாடி லேங்குவேஜ், ஸ்டைலிஷ் லுக், டயலாக் என அனைத்தும் கலந்து, சூப்பரான நடனம், பாடல் என்று ரஞ்சித் அசத்தியுள்ளார். 

 

மொத்தத்தில் கபாலியை பார்த்து சோர்ந்து ரசிகர்களின் இதயங்களுக்கு மருந்து போடும் விதமாக காலா இருக்கும் என்பதில் ஐயமில்லை . 

 

Verdict : குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA