சற்று முன்

'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |   

croppedImg_739928604.jpeg

அம்மா கணக்கு - திரை விமர்சனம்

Directed by : Ashwini Iyer Tiwari

Casting : Amala Paul, Revathi, Samuthirakani

Music :Ilaiyaraaja

Produced by : Colour Yellow Pictures, Wunderbar Films

PRO : Riaz K Ahmed

Review :

 

 

காக்கா முட்டை, விசாரணை என நல்லப் திரைப்படங்களை தயாரித்துள்ள தனுஷ், அடுத்ததாக ஆனந்த் எல் ராயுடன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் அம்மா கணக்கு.

 

 
அமலா பால், யுவஸ்ரீ, ரேவதி, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த படத்தை அஷ்வினி அய்யர் திவாரி இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

 
 
கணவனை இழந்த சாந்தி (அமலா பால்) வீட்டு வேலை, மீன் விற்பது என கடினமாக உழைத்து தனது ஒரே மகளான அபிநயாயை (யுவஸ்ரீ) படிக்க வைக்கிறார்.

 

 
பத்தாம் வகுப்பு வரை வந்தும்கூட படிப்பில் ஆர்வம் காட்டாத அபிநயா, உன்னைப்போலவே நானும் வேலைக்காரியாக ஆகப் போகிறேன் என தனது அம்மா அமலாபாலிடம் சொல்கிறார். இப்படி கூறும் மகளுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தி அவளை முன்னேற்ற அமலாபால் புதுவகை முயற்சியை மேற்கொள்கிறார்.

 

 
மகளின் எதிரியாக இருக்கும் கணக்கு பாடத்தை அவள் ஆர்வமுடன் கற்க அமலா பால் மேற்கொள்ளும் முயற்சி வெற்றிப்பெற்றதா? வேலைக்காரியின் மகள் வேலைக்காரியாகவே ஆனாரா? இல்லை சாதித்தாரா என்பதுதான் அம்மா கணக்கு படத்தின் மீதிக் கதை.

 

 
இரட்டை ஆர்த்த வசனங்கள், குத்துப் பாட்டு, சண்டை காட்சி என வழக்கமான அபத்தங்கள் எதுவுமே இல்லாமல் மிகவும் மென்மையாக பயணிக்கிறது திரைப்படம்.

 

 
அபிநயாவாக நடித்திருக்கும் யுவஸ்ரீ - அமலா பாலின் நடிப்பு அனேக இடங்களில் புல்லரிக்க வைக்கிறது.

 

 
ஏற்கனவே யதார்த்தமான ஆசிரியராக சித்தரிக்கப்பட்ட சமுத்திரக்கனி, இந்த படத்தில் புதுவகையான உடல்மொழியோடு மிகுந்த உற்சாகத்தோடு நடித்திருக்கிறார்.

 

 
ரேவதி, மற்ற நடிகர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவருமே யதார்த்தமாக தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

 

 
வேகமான திரைக்கதை, அதிரடியான திருப்பங்கள் என எதுவும் இல்லை என்றாலும், இரண்டாம் பாதிக்கு மேல் கதையோடு உருக்கமாக பார்வையாளர்களை  ஒன்றச்செய்கிறது இந்த திரைப்படம். அம்மாவின் கனவை அபிநயா விவரிக்கும் காட்சியும், இறுதி காட்சிகளும் மிக அற்புதமாக படைக்கப்பட்டிருக்கிறது.

 

 
இசைஞானியின் இசையில் "உனக்கும் எனக்கும் என்னென்ன கனவுகள்" பாடல் மனதை மயக்குகிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என படத்தின் மற்ற அம்சங்களும் கதையைப்போலவே மென்மையாக அமைந்துள்ளன.


 

மொத்தத்தில் ஒரு விளிம்பு நிலை பெண்ணின் கனவுகளை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் சித்தரித்துள்ள நல்ல படமாக அம்மா கணக்கு நிறைவை தருகிறது.

 

 

Verdict : தங்களது பெற்றோர்களோடு சேர்ந்து குழந்தைகளும் பார்க்க வேண்டிய படைப்பு

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA