சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

croppedImg_890911046.jpeg

முத்தின கத்திரிக்கா - திரை விமர்சனம்

Directed by : Venkat Raghavan

Casting : Sundar C., Poonam Bajwa, Vaibhav, Sathish

Music :Siddharth Vipin

Produced by : Sundar C. Kushboo Avni Cinemax

PRO : Johnson

Review :

 

 

மலையாளத்தில் வெற்றியடைந்த வெல்லிமுங்கா படத்தை, வழக்கமான சுந்தர்.சி பட பாணியில் காமெடி கலாட்டாவாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் "முத்தின கத்திரிக்கா"

 

இதில் சுந்தர்.சி, பூனம் பஜ்வா, சதீஷ், விடிவி கணேஷ்,  சிங்கம் புலி என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

 

40 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் சுந்தர்.சி தன்னை விட வயது குறைந்த பூனம் பஜ்வாவிடம் காதல் கொள்கிறார். மறுபுறம் யாருக்குமே தெரியாத ஒரு கட்சியில் இருந்து பெரிய அரசியல் பதவியை பிடிக்கவும் பல்வேறு கலாட்டாக்களை செய்கிறார். இறுதியில் சுந்தர்.சி பூனம் பஜ்வாவை திருமணம் செய்துக்கொண்டாரா? அரசியலில் சாதித்தாரா என்ற கேள்விகளுக்கு காமெடி நிறைந்த திரைகதையினால் பதிலளிக்கிறது முத்தின கத்திரிக்கா திரைப்படம்.

 

முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக பயணிக்கும் படத்தில், இங்கு நிலவும் அரசியலை சர்வ சாதாரணமாக நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.

 

இயக்கம் - நடிப்பு என இரண்டிலும் அசர வைக்கும் சுந்தர்.சி, இந்த படத்தில் தனது முழுமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காமெடி, காதல், அம்மா செண்டிமெண்ட் என எதிலும் குறைவில்லாமல் வெளிப்பட்டிருக்கிறது அவரது நடிப்பு.

 

வழக்கமான பாத்திரம் என்றாலும்கூட பூனம் பஜ்வாவின் மெனக்கெடல் திரையில் தெரிகிறது. சதீஷ், விடிவி கணேஷ், சிங்கம் புலி மூவரின் நகைச்சுவை பங்குதான் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

 

சித்தார்த் விபின் இசையில் இரண்டு பாடல்கள் மட்டும் கேட்க்கும்படியாக அமைந்துள்ளன. மலையாள ரீமேக் என்றாலும் திரைக்கதையை எந்த வகையிலும் வேகம் குறையாமல் இயக்கியிருக்கிறார் வெங்கட் ராகவன்.

 

பூனம் பஜ்வாவை திருமணம் செய்துக்கொள்வதில்  இருந்த சிக்கல், அரசியலில் சாதிக்க மேற்கொண்ட களவாணி தனங்கள் என நகைச்சுவையால் ஆர்ப்பரிக்கக் கூடிய காட்சிகள் ஏராளம் இருப்பதால் சளைக்காமல் சிரிக்க வைக்கிறது படம்.

 

அதனோடு கூடுதலாக திருப்பங்களையும் வழங்கி, அனைத்தும் கலந்த கலவையாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக முத்தின கத்திரிக்கா அமைந்திருப்பது சிறப்பு.

 

Verdict : அனைவரும் பார்க்ககூடிய காமெடி சரவடி - அரசியல் நையாண்டி

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA