சற்று முன்

'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |    இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது 'ஆபிரகாம் ஓஸ்லர்'!   |    அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கும் அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படம்!   |    தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் Behindwoods   |    டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள் - நடிகர் கலையரசன்   |    பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சிபெற்ற பேச்சாளர் - நடிகர் ஜெகன்   |    பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !!   |    பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில் - எஸ்.எஸ்.கார்த்திகேயா   |    திகில் நாடகத் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷியின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட 'திருட்டு பாடம்' டீஸர்   |    காடு எனக்குக் கடவுளை விட மிகவும் பிடிக்கும் - நடிகை ஆண்ட்ரியா   |    பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் 'கங்கணம்'   |    நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது   |    திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற 'பைக் டாக்சி' பூஜை!   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள RKFI   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” அமேசான் பிரைமில் வெளியாகிறது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |   

croppedImg_1777206970.jpeg

ஒரு நாள் கூத்து - திரை விமர்சனம்

Directed by : Nelson.S V M

Casting : Dinesh, Nivetha Pethuraj, Mia George

Music :Justin Prabhakaran

Produced by : J. Selvakumar, Kenanya Films

PRO : Johnson

Review :

 

 

தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா, ரித்விகா, ரமேஷ் திலக் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு நாள் கூத்து திரைப்படம், இந்த வார ரிலீசில் முதன்மை பெற்றுள்ளது.

 

காதலர்களான தினேஷ் - நிவேதா, மியா ஜார்ஜ், ரித்விகா - ரமேஷ் திலக் ஆகியோரின் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்தை சித்தரிக்கும் கதை, இந்த மூவரையும் சுற்றி பயணிக்கிறது. இறுதியில் இவர்களின் திருமணம் நடைபெற்றதா இல்லையா, இடையில் என்னென்ன திருப்பங்கள் ஏற்பட்டது என்பதுதான் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் கதைக்களம்.

 

நீண்ட நாட்களாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

மூன்று பேரின் கதை என்பதால் ஒன்றின் பின் ஒன்றாக கோர்க்கப்பட்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முதல்பாதி வரை விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியின் துவக்கத்தில் சற்று தடுமாறுகிறது. எனினும் முடிவில் ஏற்படும் திருப்பங்களால் மீண்டும் படத்தை வேகப்படுத்தியிருக்கிறது திரைக்கதை.

 

நல்ல திரைப்படங்கள் என்றாலே அது தீவிரமான சமூக பிரச்சனையை தான் பேசவேண்டும் என்றில்லாமல், வாழ்க்கை துணையை ஏற்கும் திருமணம் எனும் ஒரு சடங்குகூட எத்தகைய இன்னல்களை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக பெண்களுக்கு எம்மாதிரியான உளவியல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துமென விளக்குகிறது இந்த திரைப்படம்.

 

குக்கூ, விசாரணை படங்கள் போன்று இல்லாமல் தினேஷை அழகாக காண்பிக்கவும், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தவும் இந்த திரைப்படம் வழி செய்துள்ளது. காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ள நிவேதாவைவிட மியா ஜார்ஜ் மற்றும் ரித்விகாவின் பாத்திரங்கள் மனதில் நிற்கின்றன.

 

துறு துறு வாலிபனாக வரும் ரமேஷ் திலக் இந்த திரைப்படத்தில் புதிதாய் தெரிகிறார். பால சரவணனின் டைமிங் காமெடிகள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளன. நகைச்சுவை பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்த கருணாகரன், இதில் குணசித்திர வேடம் ஏற்று அதனை நிறைவாகவும் செய்துள்ளார். சார்லியின் நடிப்பில் திருமணம் ஆகாததின் வலியை விவரிக்கும் காட்சி நெகிழ வைக்கிறது. மொத்தத்தில் கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிக அழுத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

தனித்தனியே பயணிக்கும் மூவரின் வாழ்க்கை பயணம் ஒரே திருமணத்தில் முடியும் புள்ளி அருமை. நேர்த்தியான திரைக்கதை, அழுத்தமான பாத்திரங்களைகொண்டு ஒரு வாழ்வியல் பிரச்சனையை சரியாக சித்தரித்துள்ளது இந்த திரைப்படம்.

 

இடையில் திரைக்கதை சற்று நீட்டி முழக்கப்பட்டிருந்தாலும் அதனை ஈடுகட்டும் வகையில் முடிவை அளித்ததில் ஒரு நாள் கூத்து திரைப்படம் நிறைவை தருகிறது.

 

படம் முடிந்துவிட்டது என்று எழுந்து வந்துவிடாமல் எண்டிங் காடில் வரும் காட்சிகளை பார்த்துவிடுங்கள். உங்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவம் காத்திருக்கிறது.

 

Verdict : மூவரின் திருமணத்தை நோக்கிய விறுவிறுப்பான பயணம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA