சற்று முன்
'வெந்து தணிந்தது காடு' விமர்சனம்
Directed by : கெளதம் வாசுதேவ் மேனன், ராதிகா சரத்குமார்
Casting : சிம்பு, சித்தி இத்னானி,
Music :ஏ ஆர் ரஹ்மான்
Produced by : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
PRO : DOne
Review :
கல்லூரி படிப்பை முடித்து குடும்ப சூழ்நிலை காரணமாக முள்ளுக்காட்டினைப் பிழைப்பாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சிம்பு. ஒரு நாள் காட்டுக்குள் பரவிய தீயில் சிக்கிக்கொண்டு, போராடி காயங்களுடன் அதிலிருந்து தப்பிக்கிறார். ஜாதகம் சரியில்லாத காரணத்தால் அவருடைய தயாரான ராதிகா தனக்கு தெரிந்தவர் மூலம் அவரை மும்பைக்கு அனுப்ப முயற்சிக்கிறார். அன்று இரவு நடக்கும் ஒரு சம்பவத்தால் முத்து கையில் ரௌடிசத்தில் நுழைகிறார் சிம்பு. காலையில் பரோட்டா கடையில் வேலை, மாலையில் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரவுடியிசம் என இரு வேறு புதிய உலகங்களுக்குள் அடியெடுத்து வாய்த்த சிம்புவின் வாழ்வில் அவர் எதிர்பார்த்த நிம்மதி கிடைத்ததா. அவருடைய வாழ்க்கை நிலை என்ன என்பதுதான் "வெந்து தணிந்தது காடு"
முத்துவீரனாக நடித்துள்ள சிலம்பரசன், முதல் பாதியில் குடும்பத்துக்காக பாடுபடும் 21 வயது அப்பாவி இளைஞராகவும் , இரண்டாம் பாதியில் கேங்கஸ்டருக்கான தோற்றத்திலும் நடித்திருக்கிறார். தயக்கம், கோபம், சுயமரியாதை, ரொமான்ஸ், காதல், ஆக்ஷன் என சும்மா தெறிக்க விட்டிருக்கிறார் சிம்பு.
சித்தி இத்னானி ரெண்டு பாட்டு,ஒரு கடத்தல் சீன்-ன்னு அவருக்கு கொடுத்த வேலையில் அழகான நடிப்பை அளவாக கொடுத்து அவருடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
முத்துவின் தாயாராக ராதிகா சரத்குமார் வழக்கம்போல் மகனுக்காக உருகும் தாயாராக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டிவிட்டார் நடிகர் ஜாஃபர் சாதிக். மேலும் இந்த படத்தில் அப்புக்குட்டி,நீரஜ் மாதவ் மற்றும் பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, இசை ஆகியவை ரசிக்க வைக்கின்றன. இருந்தாலும் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் ஒரே இசை பின்னணியில் ஒலிக்கிறது. சண்டையில் சிம்பு துப்பாக்கியைக் கையில் எடுக்கும்போது ஒலிக்கும் ரஹ்மானின் குரல் செம்ம மாஸ்.
கவுதமுடன் இயக்கத்தில் ஜெயமோகன் திரைக்கதையை எழுதியிருக்கிறார். நமக்கு கொஞ்சம் பழக்கப்பட்ட கேங்ஸ்டர் படம் தான் என்றாலும் கெளதம் மேனன் அவருடைய பாணியில் சில காட்சிகளை கையாண்ட விதம் ரொம்ப அழகா இருந்தது.
பாவப்பட்ட ஜென்மங்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் நபர்கள் இருக்கும் நிழல் உலகிற்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர். படம் மெதுவாக நகர்ந்தாலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை. பாடல்கள் கதையோடு ஒன்றி செல்கிறது.
"வெந்து தணிந்தது காடு" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : பொறுமையாக பார்க்கவேண்டிய படம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















