சற்று முன்

'கோப்ரா’ விமர்சனம்
Directed by : Ajay Gnanamuthu
Casting : Vikram, Irfan Pathan, Srinidhi Shetty, Mirnalini, Meenakshi
Music :AR Rahman
Produced by : Lalith Kumar
PRO : Yuvaraj
Review :
உலக நாடுகளில் இருக்கும் முக்கியமான தலைவர்களை மதி என்கிற கணக்கு வாத்தியர் கணித முறையில் வித்தியாசமான தொடர் கொலைகளை செய்கிறார். அந்த கொலைகளை கண்டுபிடிக்க இஃபார்ன் பதான் இன்டர்போல் அதிகாரியாக என்ட்ரி தருகிறார். அந்த கொலைக்கும் தமிழ்நாட்டில் நடந்த ஒரு கொலைக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து இந்தியா வந்து இறங்குகிறார். இப்படியான சூழலில், திடீரென அவரைப் பற்றிய துப்புகளையும், தகவல்களையும் திரைமறைவிலிருக்கும் ஒருவர் காவல் துறைக்கு வெளிப்படையாக கொடுக்க ஆரம்பிக்கிறார். அப்போது அவருக்கு விக்ரம் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கின்றன. விக்ரம் யார், அவர் எதற்காக இத்தனை கொலைகள் செய்தார் என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கூறியிருப்பதே ‘கோப்ரா’ படத்தின் கதை.
விக்ரமின் நடிப்புத் திறமையை நம்பி முழுமையாக களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குனர் அஜய். விதவிதமான தோற்றங்களில் முழு படத்திலும் தனது நடிப்பால் பல காட்சிகளில் கைதட்டல் வாங்க வைக்கிறார். இந்த படத்தில் அவர் போட்டிருக்கும் ஏழு கெட்டப்புகளுடம் வியக்க வைக்கிறது. வித்தியாசமான பல கெட்டப்புகள் மட்டும் இன்றி அந்த கெட்டப்புகளுக்கு ஏற்ற உடல்மொழியை அவர் வெளிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது. நடிப்போடு ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.
மிர்னாலினி ரவி மற்றும் மீனாட்சி இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்கள். விக்ரமை ஒருதலையாகக் காதலிப்பவராக ஸ்ரீநிதி ஷெட்டி., இள வயது விக்ரம் காதலியாக சில காட்சிகளில் வந்து போகிறார் மிருணாளினி ரவி.
இன்டர்போல் அதிகாரியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், சிறப்பான அறிமுகம். அறிமுக நடிகராக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்திப் பொருந்தியிருக்கிறார்.
சாதாரண பத்திரிகையாளராக வரும் கே.எஸ்.ரவிக்குமாரை அண்டர்கவரில் சர்வதேச லெவலில் ஆபரேஷன்கள் செய்பவராகக் காட்டிவிட்டு, பின்னர் அவரையே காமெடி பீஸ் ஆக்கியிருக்கிறது சூப்பர். காமெடிக்காக சேர்க்கப்பட்டிருக்கும் ரோபோ சங்கர், வழக்கம் போல் காமெடி என்ற பெயரில் மொக்கை போடுகிறார்.
ஒளிப்பதிவாளர் புவன் ஸ்ரீனிவாசன் காட்சிகளை பிரம்மாண்டமாக படமாகியிருக்கிறார். விக்ரமின் வித்தியாசமான கெட்டப்புகள் மற்றும் அதை காட்டிய விதம் சிறப்பாக உள்ளது. முழு படமே ஏதோ ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்திருந்தாலும், சில இடங்களில் எதிர்ப்பார்த்த அளவு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
படத்தின் இயக்குனர் படத்தை பிரமாண்டமாக கட்டுவதில் கட்டிய அக்கறையை திரைக்கதையில் கட்டியிருந்தாள் மிகவும் நலமாய் இருந்திருக்கும். படத்தின் முதல் பாதி எப்போது நிறைவடையும் என்ற அளவிற்கு சலிப்பை ஏற்படுத்துகிறது திரைக்கதை. இடைவேளை காட்சியால் முதல் பாதியின் சலிப்பை பொறுத்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது.
"கோப்ரா" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : லாஜிக்கே இல்லத்தை பொழுதுபோக்கு படம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA