சற்று முன்
’திருச்சிற்றம்பலம்’ விமர்சனம்
Directed by : Mithran R Jawahar
Casting : Dhanush, Nithya Menon, Prakashraj, Bharathiraja, Priya Bhavani Shankar, Rashi Khanna, Sriranjani, Mu Ramasamy, Munishkanth
Music :Anirudh Ravichander
Produced by : Kalanithi Maran
PRO : Riaz K Ahamed
Review :
தனுஷ் அப்பா பிரகாஷ்ராஜ், மற்றும் தாத்தா பாரதிராஜாவுடன் வசித்து வருகிறார். தாயும், தங்கையும் இறந்ததிலிருந்து தந்தையுடன் பேசாமல் இருக்கும் தனுஷுக்கு அதே கட்டிடத்தில் வசிக்கும் நித்யா மேனன் குழந்தைப்பருவத்திலிருந்தே ஒரு நல்ல நெருங்கிய தோழியாக இருக்கிறார். தனுஷ் நீண்ட நாளைக்குப்பிறகு அவருடைய பள்ளித்தோழியான ரக்ஷிக்கண்ணாவை சந்திக்கிறார். காதல்வயப்படுகிறார் அவருடைய காதலை ரக்ஷிக்கண்ணா நிராகரிக்கிறார். அடுத்து ஒரு விசேஷத்தில் சந்திக்கும் உறவுக்கார பெண்ணான பிரியா பாவனிசங்கரை காதலிக்கிறார். அவரும் மறுத்துவிடுகிறார். இதனால் மன வருத்ததுடன் இருக்கும் தனுஷுக்கு ஆறுதல் கூறுகிறார் நித்யாமேனன். இறுதியில் தனுஷின் காதல் கூடியதா ? அவர் யாரை மணந்தார் ? மகன் - தந்தை ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா? தனுஷ் தந்தையை வெறுக்க காரணம் என்ன ?, அவர்களுடைய இந்த நிலைக்கு காரணம் என்ன? என்பதை உணர்ச்சி ததும்ப கூறியிருப்பதே ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் கதை.
தனுஷ் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக நடித்திருக்கிறார். ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பையனாக யதார்த்தமான நடிப்பை எப்பொழுதும் போல் சிறப்பாக கொடுத்திருக்கிறார். தந்தை மீது கோபப்படும்போதும் தாத்தா மீது பாசம் காட்டும்போதும் காதல் கைகூடாமல் தவிக்கும் போதும் போது தனுஷின் இயல்பான நடிப்பும், ரியாக்ஷனும் அனைவரையும் கலங்கடித்து விடுகிறார். பொதுவாக எல்லா படத்திலும் அடிதடி என தூள் கிளப்பும் தனுஷ் இந்த படத்தில் சண்டை என்றால் பயம் என்று கூறி அமைதியாக போகும் தனுஷையம் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள்.
தனுஷின் நெருங்கிய தோழியாக நடித்திருக்கும் நித்யா மேனன் கண்களாலேயே பேசியிருக்கிறார் என்றே கூறவேண்டும். தனுஷ் சோர்ந்துபோகும்போது அவருக்கு ஆறுதல் கூறும் தருணங்களில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்னும் அளவுக்கு போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். நித்யா மேனன் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று கூறலாம். ஒட்டு மொத்த நடிகர்களுக்கும் சவாலாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்.
தனுஷின் பள்ளி தோழியாக வரும் ராஷி கண்ணா மற்றும் உறவுக்கார பெண்ணான பிரியா பவானி சங்கர் இருவரும் ஆளுக்கொரு பாடலுக்கு நடனம் மற்றும் சில காட்சிகளும் என அவர்களுக்கு கொடுத்த வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
தனுஷின் தாத்தாவாக நடித்திருக்கும் பாரதிராஜா 10 வருடங்களாக பேசாமல் இருக்கும் அப்பா - மகன் இடையே ஒரு பாலமாக இருக்கிறார். தந்தையுடன் சண்டையிடும் தனுஷுக்கு ஆறுதல் கூறும்போதும் சரி, மகனுக்கு அறிவுரை கூறும்போதும் சரி நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.
தனுஷின் தந்தையாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக இருந்தபோதும். ஒரு பக்க வாதம் வந்தபோதும் இலக்கை உபாதை கழிக்க செல்ல முடியாமல் தவிக்கும் போதும் நடிப்பில் நம்மையே ஒரு நிமிடம் உருகவைத்துவிடுகிறார். அவருடைய அனுபவ நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
முனிஷ்காந்த், ஸ்ரீரஞ்சனி, மு.ராமசாமி என சிறு சிறு வேடத்தில் நடித்திருக்கும் நடிகர்களும், அவர்களது கதாப்பாத்திரமும் ரசிக்கும்படியும், மனதில் நிற்கும்படியும் உள்ளது.
இசை அனிருத் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும், ரசிக்குப்படியாகவும் இருக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில்உள்ளது.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் நகரம் மற்றும் கிராமம் இரண்டுமே அழகாக இருக்கிறது. பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது.
காதலை மிக நாகரீகமாக காட்சிப்படுத்தியதோடு, காதல் என்றால் என்ன? என்பதை அணைத்து தரப்பினருக்கும் தெளிவாக புரிய வைத்திருக்கிறார். இருபாலர் நட்பை எந்த வித முக சலிப்பும் இன்றி இப்படியும் ஒரு நட்பு அமையாத என்று ஏங்கும்படியாக காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அன்பு, பாசம், காதல், புரிதல், கோவம் என எல்லாம் கலந்த கலவையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
"திருச்சிற்றம்பலம்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : "திருச்சிற்றம்பலம்" குடும்பத்துடன் பார்க்கலாம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















