சற்று முன்

நடிகர் சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு 'யாத்திசை' படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியானது!   |    ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' டிரெய்லர்!   |    VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |   

croppedImg_1954178630.jpeg

’விருமன்’ விமர்சனம்

Directed by : M. Muthaiah

Casting : Karthi, Adhithi Sankar, Prakash Raj, Rajkiran, Karunas, Suri, Singam Puli, RK Suresh, Saranya Ponvannan, GM Sundar, Vadivukarasi

Music :Yuvan Shankar Raja

Produced by : Suriya Jyothika

PRO : Johnson

Review :

பிரகாஷ்ராஜின் தவறான நடத்தையால் அவருடைய மனைவி சரண்யா பொன்வண்ணன் தீயிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். தன கண்முன்னே தன்னுடைய தாயார் இறந்ததை கண்ட கார்த்தி அதற்கு காரணமான தந்தையை கொலைசெய்ய சிறுவயதிலேயே முயற்சி செய்கிறார்.  கார்த்தியின் வாழ்க்கை சீரழிந்துவிடுமோ என்ற பயத்தால் அவருடைய தாய்மாமனான ராஜ்கிரண் தன தங்கை பிள்ளைகள் நால்வரில்  கார்த்தியை மட்டும் தனியே அழைத்துக்கொண்டு வந்து  வளர்க்கிறார். பல வருடங்கள் கழித்து மீண்டும் தனது தந்தையை சந்திக்கும் கார்த்தி அதே கோபத்துடன் இருக்கிறார்.  தனது அம்மாவின்  ஆசைப்படி தனது அண்ணன்களை அம்மாவின் நினைவிடத்திற்கு அழைத்து வருவதற்காகவும், தனது அப்பாவை நல்வழிப் படுத்துவதற்காகவும் முயற்சியில் ஈடுபடும்  கார்த்தி அந்த முயற்சியில்  வெற்றி பெற்றாரா? இல்லையா?  என்பதுதான் "விருமன்" படத்தின் கதை 

 

நாயகன் கார்த்தி, கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளார். அவரது உடல்மொழி, நடை, உடை என அனைத்தும் அவருக்கு சூப்பராக செட் ஆகி உள்ளது. கம்பீரமான, துடுக்கான நடிப்பை அசால்டாக வெளிப்படுத்திஇருக்கிறார். ஆக்‌ஷன் காட்சியில் தூள் கிளப்பியிருக்கிறார்.  செண்டிமெண்ட், ரொமான்ஸ் காட்சிகளிலும் தூள் கிளப்பி உள்ளார். ஒரு சில காட்சிகளில் மட்டும் பருத்திவீரன் சாயல் தெரிகிறது. 

 

கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார் அதிதி சங்கர். நடிப்பதற்கு பெரிதாக சொல்லும்படியாக இல்லை. பாடல் காட்சிகள் நடன அசைவுகளில் அசத்தியிருக்கிறார். 

 

கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ். ஆணாதிக்க மனோபாவம் கொண்ட, தான் சொல்வதை மட்டுமே மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய கதாபாத்திரம். நீண்ட இடைவெளிக்கு பிறகு வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ்  தத்ரூபமாக நடித்திருக்கிறார். 

 

கார்த்தியின் தாய் மாமனாக நடித்துள்ள ராஜ்கிரண் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவருக்காக வைக்கப்பட்டுள்ள ஒரு சண்டைக்காட்சி விசில் பறக்கும் அளவுக்கு சூப்பராக எடுக்கப்பட்டுள்ளன.

 

சூரியின் காமெடி படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. இவருக்கு மனைவியாக நடித்துள்ள இந்திரஜாவும், தேவைக்கேற்ப நடித்துள்ளார். 

 

ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருப்பதோடு, கிராமத்தின் அழகை ரசிகர்கள் ரசிக்கும்படியும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

 

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருக்கிறது. அளவான பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

திரைக்கதையின் வேகமும், காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு, செண்டிமெண்ட் என படத்திற்கு அதிக பலம் சேர்த்திருக்கிறார்கள். படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பதும், அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பதும் படத்திற்கு மைனஸ்.

 

"விருமன்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

 

 

Verdict : "விருமன்" மிரட்டல்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA