சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

croppedImg_1091730598.jpeg

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் விமர்சனம்

Directed by : எழில்

Casting : விஷ்ணு, நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ ஷங்கர்

Music :சி சத்யா

Produced by : விஷ்ணு விஷால், ராஜன் நடராஜ், எழில்

PRO : ரியாஸ் கே அஹமத்

Review :

 

 

விஷ்ணு, நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ ஷங்கர், ஆகியோர் நடிப்பில் எழில் இயக்கத்தில், ஃபாக்ஸ் ஸ்டார் & விஷ்ணு விஷால் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.

 

எம்.எல்.ஏ ரோபோ சங்கர் நடத்திவரும் தையல் கடையில் வேலைபார்க்கும் விஷ்ணு, எம்.எல்.ஏ ரோபோ சங்கரின் வலது கரமாக இருக்கிறார். அவருடைய நெருங்கிய நண்பராக வருகிறார் சூரி. எம்.எல்.ஏ நடத்தும் இலவசதிருமணத்தில் கடைசியில் ஆள் குறைய விஷ்ணு சூரியை நடிக்க வைத்து சரிகட்டுகிறார். 

 

இதற்கிடையில் விஷ்ணு மெஸ் நடத்திவருபவருடைய மகளான நிக்கி கல்ராணியை விரும்புகிறார். போலீசாகும் நோக்கில் சண்டிராணியாக இருக்கும் கல்ராணி விஷ்ணுவை உதாசினப்படுத்துகிறார். விஷ்ணுவுக்கு எம்.எல்.ஏ-விடம் இருக்கும் செல்வாக்கை கண்டு நிக்கி கல்ராணிக்கு போலீஸ் வேலை வாங்கிதரவேண்டி விஷ்ணுவிடம் அவருடைய தந்தை 10 லட்சம் தருகிறார். 

 

நிக்கி கல்ராணிக்கு போலீஸ் வேலை கிடைத்தவுடன் தன்னுடைய காதலை சொல்ல வருகிறார் விஷ்ணு, அந்த சமயத்தில் தன்னுடைய திறமையால் தான் தனக்கு போலீஸ் வேலை கிடைத்தது என நிக்கி கல்ராணிக்கு தெரியவருகிறது. 

 

சூரி, புஷ்பாவிடம் விடுதலை பத்திரத்தில் கையெழுத்து கேட்க எம்.எல்.ஏ வந்து கூறினால் தான் கையெழுத்து என புஷ்பா கூற அந்த நேரத்தில் எம்.எல்.ஏ-விடம்  ரூ 500 கோடி பணம் குறித்த ரகசியத்தை சொல்லிவிட்டு உயிரை விடுகிறார் மந்திரி. அந்த ரகசியத்தை பற்றி மந்திரியின் மச்சான் எம்.எல்.ஏ-விடம் கேட்க சிறு கைகலப்பில்  எம்.எல்.ஏ தலையில் அடிபட்டு தன்னுடைய 10 வயது காலத்துக்கு சென்றுவிடுகிறார்.

 

அவர் மறுபடியும் பழைய நிலைமைக்கு வந்தாரா? நிக்கி கல்ராணியின் பணம் என்ன ஆனது? சூரிக்கு புஷ்பாவிடம் இருந்து விடுதலை கிடைத்ததா? மந்திரியின் மச்சானுக்கு ரூ 500 கோடி பணம் கிடைத்ததா? என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.

 

விஷ்ணு அவருக்கு கொடுத்துள்ள கதாபத்திரத்தை கனகட்சிதமாக செய்துள்ளார். சூரிக்கு உதவி செய்ய அழைத்து செல்வது போல் சென்று அதில் சூரியையே கோர்த்துவிடுவது இவை தான் ஊமை குசும்பு என்பார்களோ!

 

நிக்கி கல்ராணி தன்னை போலீஸாகவே எண்ணி வாழ்வது சரி ஆனால் அதற்காக தன்னுடைய முகத்தில் காட்டும் பாவனைகள் சற்று அதிகபடியாக உள்ளது. அவை பார்ப்பதற்கு யதார்த்தமாக இல்லை. 

 

சூரி பட்டைய கிளப்புகிறார். நடிப்புக்கு புஷ்பா கழுத்தில் தாலி கட்டி அதனால் அவர் படும் அவஸ்தை மற்றும் புஷ்பா புருஷன் என அனைவரும் அவரை அழைக்கும் போது அவருடைய முகம் போகும் போக்கிலும் சரி, கிளைமாக்ஸ் காட்சியில் ஒருகட்டத்தில் ரவுடிக்கு பதிலாக  அவருடைய கழுத்தில் அவரே அரிவாளை பிடிக்கும் காட்சியிலும் சரி, நகைசுவையில் சூரி வெளுத்து கட்டியிருக்கிறார்.

 

ரோபோ சங்கர் இந்த படத்தில் எம்.எல்.ஏ-வாக நடித்துள்ளார். இந்த படத்தில் சூரி நகைச்சுவையில் அவ்வப்போது சரவெடியாக வந்து வெடித்து சிதறினாலும். ரோபோ சங்கர் படத்தின் கடைசியில் ஆட்டோபாமே கொழுத்திபோட்டுவிட்டார். 

 

இறுதியில் ஆவிகளுடன் மொட்டை ராஜேந்திரனை சேர்த்து ஒரு துள்ளல் ஆட்டம். இவ்வாறு படத்திற்கு பாடல்களை வேண்டுமென்றே பொருத்தியது போல் இருந்தது.

 

துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு என சீரியஸான காதல் கதைகளை சொன்ன இயக்குநர் எழில் இந்த முறை வித்தியாசமாக நகைச்சுவையுடன் காதலை சேர்த்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஆனால் இந்த காமெடி காலத்தவை இறுதியில் மட்டும் வைக்காமல் படம் முழுக்க பகிர்ந்து அளித்திருக்கலாம்.

 

இசை சி சத்யா, பாடல்கள் படத்துக்கு சற்றும் ஒட்டவில்லை என்றே சொல்லலாம். 

 

மொட்டை ராஜேந்திரன் படங்களில் எல்லாம் ஐ அம் வெய்ட்டிங் என்று சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார் அனால் இன்னும் அவர் எதற்காக  வெய்ட்டிங்என்றே தெரியவில்லை. 

 

சக்தியின் ஒளிப்பதிவு அருமை 

 

படத்தை பொறுத்தவை சூரியும், ரோபோ சங்கரும் மாறி மாறி  தீபாவளியே கொண்டாடியிருக்கிறார்கள். தியேட்டரில் ஒரே கைதட்டல் சத்தம். பாடல்கள் புஷ்வானம். இவைதான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.

 

 

Verdict : குடும்பத்துடன் பார்க்ககூடிய நகைச்சுவை படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA