சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

croppedImg_1827641452.jpeg

'சீதா ராமம்' விமர்சனம்

Directed by : Hanu Raghavapudi

Casting : Dulquer Salmaan, Mrunal Thakur, Rashmika Mandanna, Sumanth, Prakash Raj, Goutham Vasudev Menon

Music :Vishal Chandrasekhar

Produced by : Aswini Dutt

PRO : Yuvaraj

Review :

காஷ்மீரில் நடக்கவிருந்த ஒரு பெரிய மதக்கலவரத்தைத் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்துகிறார் இந்திய இராணுவ வீரரான துல்கர்சல்மான் மற்றும் அவரது குழுவினர். இதனால் நாடெங்கும் பிரபலமடைந்த துல்கர்சல்மானையம் அவரது குழுவினரையும் பேட்டி எடுக்கிறது வானொலி. அந்த பேட்டியின் மற்றவர்கள் தங்களது குடும்பத்தாரிடம் பேச  துல்கர்சல்மானோ தனக்கு யாரும் இல்லையென்றும் தான் ஒரு அனாதை என்றும் கூறுகிறார். அன்றிலிருந்து அவருக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வரத்தொடங்குகின்றன. அதில் ஒரு விலாசம் இல்லாத கடிதத்தில் நான் உங்கள் மனைவி சீதாமகாலட்சுமி என்று குறிப்பிட்டு இருக்க அந்த கடிதம் வாயிலாக வழிந்த காதலால் ஈர்க்கப்பட்டு துல்கர்சல்மான், அந்த முகவரியில் உள்ள சீதாமகாலட்சுமியை தேடி செல்கிறார். அனுப்புநர் கடிதத்தில் உள்ள அஞ்சல் முத்திரையை வைத்துகொண்டு அனுப்பியவர் யார் எனத் தேடி செல்லும் துல்கர் சல்மான் அவரை சந்தித்தாரா ? சீதா மகாலட்சுமி யார்? இவர்கள் காதல் கைகூடுமா என்பதுதான் "சீதா ராமம்" படத்தின் கதை. 

 

ராணுவ வீரராக நடித்திருக்கும் துல்கர் சல்மான், ராணுவ வீரருக்கான கம்பீர தோற்றத்தோடு நடிக்கும் போதும் சரி உருகி உருகி காதல் செய்யும் காட்சிகளில் சரி துல்கர் சல்மான் போல் யாராலும் பொருந்தி நடிக்க முடியாது, என்று சொல்லும் அளவுக்கு துல்கர் சல்மாநடித்திருக்கிறார். 

 

சீதாமகாலட்சுமியாக நடித்திருக்கும் மிருணாள் தாகூர், அழகான முகத்தோடு, அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார். 

 

ராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், சுமந்த், ராஷ்மிகாவின் நண்பராக நடித்திருக்கும் தருண் பாஸ்கர், வெண்ணிலா கிஷோர் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர்கள் பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் காஷ்மீரின் அழகில் நம்மை மூழ்கடிப்பதோடு, கதாப்பாத்திரங்களையும் மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் லொக்கேஷன்களையும், பாடல் காட்சிகளையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, காதலர்களின் உணர்வுகளோடு, ராணுவ வீரர்களின் வலிகளையும் நம்முள் கடத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

 

ராஷ்மிகாவுடன் பயணப்படும் தருண்பாஸ்கர், துல்கரின் நண்பராக வரும் வெண்ணிலாகிஷோர், இராணுவ அதிகாரிகளாக வரும் கெளதம்மேனன், பிரகாஷ்ராஜ், சுமந்த் உள்ளிட்டு படத்தில் இருக்கும் அனைவரும் தத்தம் கதாபாத்திரங்களைச் சரியாகச் செய்து படத்துக்கு உதவியிருக்கிறார்கள்.

 

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் உருக வைக்கிறது. மதன் கார்கியின் ஒவ்வொரு வரிகளும் நம்முள் காதல் உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையில் இருக்கிறது. 

 

சீதா ராமம் என தலைப்பு வைத்து இந்து முஸ்லீம் காதல் கதையை இயக்குனர் ஹனு கொண்டு சென்ற விதமும் விறுவிறுப்பான திரைக்கதையும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மிகச்சிறந்த ரொமான்டிக் லவ் ஸ்டோரி பார்த்த மனநிறைவு ஏற்படுகிறது. 

 

"சீதா ராமம்" படத்திற்கு மதிப்பீடு 4/5

 

 

Verdict : "சீதா ராமம்" கதையல்ல ஒரு காதல் காவியம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA