சற்று முன்

பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |   

croppedImg_930282856.png

'கொம்புவச்ச சிங்கம்டா’ விமர்சனம்

Directed by : S.R. Prabhakaran

Casting : M.Sasikumar, Madonna Sebastian, Soori, Director Mahendran, Hareesh Peradi, Aruldoss, Inder Kumar, Sri Priyanka

Music :Dhibu Ninan Thomas

Produced by : Redhan The Cinema People - Inder Kumar

PRO : AIM

Review :

 

 

1990-1994ல் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

 

சிறு வயதில் இருந்தே சாதி, வித்தியாசம் பார்க்காமல் பழகும் ஆறு நண்பர்கள், பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி சமத்துவம், சகோதரத்துவம் என்று ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற நினைக்கிறார். ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவுக்கு போகிறார்கள். அவர்களுக்கிடையே அப்படி ஒரு பகை எப்படி ஏற்பட்டது?, அதன் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.

 

அனைத்து ரியாக்‌ஷன்களிலும் எந்த உணர்வையும் கண்டறிய முடியாத அளவுக்கு பொத்தம்பொதுவாக முகத்தை வைத்துக் கொள்கிறார். காதல் காட்சிகளில் செயற்கைத்தனம் தெரிகிறது. நண்பர்கள் கொலை, அதை தொடர்ந்து எழும் பிரச்சனைகள், அதை சரி செய்ய எடுக்கும் நடவடிக்கைகள் என அதிரடி ஏரியாக்களில் மட்டுமே தன் அக்மார்க் நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார்.

 

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். டோனா செபாஸ்டியன் பாடல்களுக்கு மட்டுமே பயன்பட்டுள்ளார். 

 

இயக்குநர் மகேந்திரனின் இயல்பான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பில் இருக்கும் துடிப்பு அருமை, அவரது கதாப்பாத்திம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சமுத்திரக்கனி சில காட்சிகளே வந்தாலும், தனது நடித்திறமையை கச்சிதமாக செய்திருக்கிறார். 

 

கரூ மாவட்டத்தின் அழகை கண்னுக்கு நிறைவாக கேமராவுக்குள் காட்சிப்படுத்தியுள்ளார் என்.கே.ஏகாம்பரம் திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை, பரவாயில்லை ரகம்தான். டான் போஸ்கோ எடிட்டிங் சுமார்.

 

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சுந்தரபாண்டியன்’ படத்துக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருந்ததால் அப்படத்தின் திரைக்கதை கட்டமைப்பையே இயக்குநர் இப்படத்திலும் பயன்படுத்தியுள்ளார். 

 

ஸ்டண்ட் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க, ராஜூ சுந்தரம் நடன இயக்குனராகவும், மைக்கேல்ராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர். 

 

சாதி பாகுபாடு வேண்டாம் என்று கூறி சாதி பெருமையை பேசும் படமாக உள்ளது.

 

"கொம்புவச்ச சிங்கம்டா" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : சமூக அக்கறை கலந்த கமர்ஷியல் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA