சற்று முன்

யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம்!   |    அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் 'பைசன் காளமாடன்'!   |    கலக்கலான ரொமான்ஸ் காமெடி திரைப்படமான 'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில்!   |    கதையை கேட்டு முடித்தவுடன் மிகவும் பொறுமை தேவை என்பதை உணர்ந்தேன்! - நடிகர் கவின்   |    மூன்றாவது முறையாக ஆசிரியையாக நடித்திருக்கிறேன்! - நடிகை ஜோதிகா   |    கமல் சார் நடிப்பதை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை! - நடிகர் அர்ஜூன் தாஸ்   |    'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்   |    இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |   

croppedImg_1350805644.jpeg

'என்ன சொல்ல போகிறாய்’ விமர்சனம்

Directed by : Hariharan

Casting : Ashwin Kumar Lakshmikanthan, Teju Ashwini, Avandika Mishra, Pugazh, Subbu Panchu

Music :Vivek - Mervin

Produced by : Trident Arts - R.Ravindran

PRO : DOne

Review :

 

 

பிரபலமான Fm ஸ்டேஷனின் Rjவாக பணியாற்றி வரும் அஸ்வின்.  இவருடைய அப்பா அவந்திகா மிஷ்ராவை அஸ்வினுக்காக பெண் பார்க்கிறார். எழுத்தாளராக பணியாற்றி வரும் அவந்திகா மிஷ்ரா, தனது கணவர் காதல் தோல்வி அடைந்தவராக இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்.

 

அவந்திகா மிஷ்ராவை திருமணம் செய்துக்கொள்வதற்காக அவரிடம், தான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்ததாக பொய் சொல்லும் நாயகன் அஸ்வின், அந்த பெண்ணாக தேஜு அஸ்வினியை நடிக்கவும் வைக்கிறார். 

 

தேஜு அஸ்வினியை பார்க்க வேண்டும் என்றுஅவந்திகா மிஷ்ராவை சொல்ல, அஸ்வினும் அழைத்து வருகிறார். தேஜு அஸ்வினியை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரின் தாத்தாவான டெல்லி கணேஷ் நச்சரிக்கிறார். அதில் இருந்து தப்பிக்க தன் காதலராக நடிக்க வேண்டும் என்று அஸ்வினிடம் கூறுகிறார் தேஜு அஸ்வினி. 

 

ஒரு கட்டத்தில் தேஜு அஸ்வினி மீது காதல் வயப்படுகிறார் அஸ்வின். இதனால் அஸ்வினுக்கு ஏற்படும் பிரச்சனைகள் இறுதியில் காதல் யாரை யாருடன் சேர்த்து வைக்கிறது, என்பதே படத்தின் மீதிக்கதை

 

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின், காதல் கதைக்கு ஏற்ற தேர்வு. அஸ்வினும் காதல் காட்சிகளில் ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். பெண்களை ஈர்க்கும் அவருடைய இளமை கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினாலும், காதலை வெளிப்படுத்தும் இடங்களில் நடிப்பில் பெரிய தடுமாற்றம் தெரிகிறது. சென்டிமென்ட் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். 

 

நாயகிகளாக வரும் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா ஆகியோர் அழகாக வந்து சொன்ன வேலையை செய்திருக்கிறார்கள். 

 

சின்னத்திரை நிகழ்ச்சியில் கைகொடுத்த அஸ்வின், புகழ் காம்பினேஷன் இந்த படத்தில் பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகவில்லை. புகழ், லொள்ளு சபா ஸ்வாமிநாதனின் காமெடி கை கொடுக்கவில்லை. இருந்தாலும் படம் போர் அடிக்கவில்லை.

 

விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். 

 

ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு காட்சிகளையும், கதாப்பாத்திரங்களையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.

 

முதல் பாதி சூப்பராக இருந்தாலும் இரண்டாம் பாதி ரசிகர்களை சோதிக்கிறது. கதையிலும் பெரிய அளவில் அழுத்தம் இல்லை. கதையை கொஞ்சம் ஜவ்வாக இழுத்துவிட்டார் இயக்குநர். 

 

"என்ன சொல்ல போகிறாய்" படத்திற்கு மதிப்பீடு 2.5/5

 

Verdict : முக்கோண காதல் கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA