சற்று முன்

‘மாயோன்’ படக்குழுவினர் வழங்கும் இசைப் பரிசு   |    'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்   |    இலங்கையில் கேக் வெட்டி நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம்!   |    புத்தம் புது காலை விடியாதா..பற்றி பாலாஜி மோகன் கருத்து !   |    ரவீனாவை என்னைப்போல் யாரும் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டார்கள் ! - நடிகர் விஷால்   |    பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று இணையத்தை கலக்கும் ‘புத்தம் புது காலை விடியாதா’   |    தமிழர் திருநாளன்று நடிகர் பார்த்திபன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட 'ஆதார்' ஃபர்ஸ்ட் லுக்   |    இயக்குநர் SR பிரபாகரன் இயக்கத்தில் “கொம்பு வச்ச சிங்கம்டா”   |    பரவசமூட்டும் படங்கள் - இலவச டிக்கட்டுகளை வழங்கவுள்ள இணையதளம் !   |    பக்கத்து வீட்டு பெண்ணாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் லிஜோமோள் ஜோஸ் !   |    டிஜிட்டல் தளங்கள் குறித்து நடிகை நதியா பெருமிதம் !   |    வடிவேலுவுக்காக லண்டனில் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் !   |    நெஞ்சை உருக்கும் கதைக்களத்துடன் 'சினம் கொள்'   |    சண்டிகர் கரே ஆஷிக்கி குழுவினருக்கு இயக்குநர் விஜயஸ்ரீ பாராட்டு !   |    சர்வதேச எல்லை கடந்து புகழ் பெற்றுள்ள புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 - பார்க்க தூண்டும் 5 காரணங்கள் !   |    பெண் சாதனையாளர்களுக்கு சுயம்பி விருது, 4-வது சங்கமத்தை நடத்திய இலங்கேஸ்வரி முருகன்   |    IK.Jayanthi lal appointed as Commissioner   |    ஆர் கே செல்வமணியை எச்சரித்த தயாரிப்பாளர்கள் சங்கம்   |    பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா விஜயகுமார் நடிக்கும் 'தில்லு இருந்தா போராடு'   |    விவேக் & மெர்வினின் உணர்வுபூர்வமான இசையில் ஹரிஹரன் இயக்கத்தில் ‘என்ன சொல்ல போகிறாய்’   |   

croppedImg_1570011527.jpeg

’கார்பன்’ விமர்சனம்

Directed by : R.Srinuvasan

Casting : Vidaarth, Dhanya, Marimuthu, Munar Ramesh, Vinod Sagar, Ajay Natraj

Music :Sam CS

Produced by : A.Bagyalakshmi, M.Anandhajothi and R.Srinuvasan

PRO : DOne

Review :

போலீஸ் வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஐடிஐ படிப்பு படித்த கதாநாயகன் விதார்த். வழக்கம்போல் வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றுவதால் மகன் மீது கோபத்துடன் இருக்கும் தந்தை. என கதை துவங்குகிறது. இதற்கிடையில் விதார்த்துக்கு கனவில் வருகிற விஷயங்கள் நிஜத்திலேயே நடந்து வருகிறது. இதனால் பயப்படும் விதார்த் ஒரு கட்டத்தில் விதார்த்தின் தந்தையான மாரிமுத்துவிற்கு விபத்து நடப்பதுபோல் கனவு தோன்றுகிறது . பதறிஅடித்துக்கொண்டு வித்தார்த் தன் அப்பாவை காப்பாற்ற போகும் வேளையில் அவருக்கு உண்மையிலேயே அந்த விபத்து நடந்துவிட்டது.

 

இது விபத்தல்ல கொலைமுயற்சி என விதார்த்திற்கு தெரியவர இது ஏன் நடத்தப்பட்டது என்று தினம் தினம் கனவில் தேடி செல்கிறார். உண்மையில் இது கொலையா? இந்த கொலையை நிகழ்த்த காரணம் என்ன? கொலையாளிகளை கதாநாயகன் விதார்த் பிடித்தாரா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் விதார்த் அப்பா மீது பிள்ளைகள் வைத்திருக்கும் பாசத்தை வெளிக்காட்டும் காட்சிகளிலும், உயிருக்கு போராடும் அப்பாவை காப்பாற்ற துடிக்கும் காட்சிகளிலும் நிறைவாக நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் தன்யா, ஆரம்பத்தில் அமைதியான நடிப்பின் மூலம் கவர்கிறவர், இரண்டாம் பாதியில் எடுக்கும் விஸ்வரூபம் மிரட்டுகிறது.

 

விதார்த்தின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்து, எப்போதும் போல் தனது இயல்பான நடிப்பால் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார். காவலராக நடித்திருக்கும் மூணாறு ரமேஷ், வினோத் சாகர், அஜய் நட்ராஜ் என படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் கதையோடு பயணித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவு விவேகானந்த் சந்தோஷ், இசை சாம் சி.எஸ், படத்திற்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் பணி படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

 

அறிமுக இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாசன் ஒரு புதுவிதமான முயற்சியை  கையாண்டிருக்கிறார். திரைக்கதையை அழகாக கொண்டு சென்று இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் டுவிஸ்ட் ரசிகர்களை கைத்தட்ட வைக்கிறது.

 

"கார்பன்" படத்திற்கு மதிப்பீடு 3/5

Verdict : ’கார்பன்’ க்ரைம் சஸ்பென்ஸ் கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA