சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

croppedImg_1808733986.jpeg

'பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' விமர்சனம்

Directed by : Varadaraj

Casting : Rajkamal, Madhu, Shwetha Pandi, Vijay TV Ramar, Jayachandran, Chris Pepie

Music :Vivek Chakravarty and Judha Sandy

Produced by : Rainbow Productions

PRO : Sakthi Saravanan

Review :

 

 

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கும்பல், எப்படி எல்லாம் செயல்படுகிறது, அவர்கள் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதையும், அப்படிப்பட்ட கொடூர கும்பலின் வலையில் சிக்காமல் இருக்க பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்பதையும் விவரிப்பது தான் ’பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’.

 

கேமராவை மறைத்து வைத்து எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களால் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை பறிபோய்க்கொண்டிருக்க, அத்தகைய செயல்களில் ஈடுபடும் கும்பலின்  பகீர் பின்னணியை பதற வைக்கும் காட்சிகளோடு சொல்லியிருப்பதோடு, அத்தகைய கும்பலின் செயல்கள் எங்கெல்லாம், எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை சொல்லி பெண்களை எச்சரித்திருக்கிறார்கள்.

 

படத்தின் நாயகனாக நடித்துள்ள ராஜ்கமல், கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதோடு, இரண்டு விதமான நடிப்பில் மிரட்டவும் செய்கிறார்..

 

போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தும் மது, கதாநாயகியாக நடித்திருக்கும் சுவேதா பாண்டி, ஆப்பிரிக்க நாட்டவரான கிரிஸ் பெப்பி என அனைவரின் நடிப்பும் நிறைவாக உள்ளது.

 

சதிஷ்குமார் மற்றும் கர்வா மோகனின் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்கிறது. ஜுதா சாண்டியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவும், விவேக் சக்கரவர்த்தியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் உள்ளது.

 

தொழில்நுட்ப வளர்ச்சியில் இருக்கும் ஆபத்துகளையும், குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டில் இருக்கும் ஆபத்துகள் குறித்து படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் வரதராஜ், பெண்களை ஆபாசமாக வீடியோ எடுக்கும் கும்பலின் பின்னணியையும், அவர்களால் பெண்கள் எத்தகைய பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள், என்பதையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார்.

 

ஓட்டல் அறைகளில் இலவசமாக வழங்கப்படும் வைபை சேவையால் எப்படிப்பட்ட ஆபத்துகள் இருக்கிறது, என்பதை இயக்குநர் காட்டிய விதம் பேரதிர்ச்சியாக இருக்கிறது.

 

மொத்தத்தில், ’பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஆபத்துகளையும் அவற்றில் இருந்து பெண்கள் தப்பிப்பதற்கான வழிகளையும் சொல்லும் படமாக மட்டும் இன்றி, பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாகவும் உள்ளது.

 

"பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே" படத்திற்கு மதிப்பீடு 3/5

Verdict : பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA