சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

ஜோக்கர் படத்தை திருட்டு வி.சி.டியில் பார்க்காதீர்: மக்கள் ஜனாதிபதி மன்னர் மன்னன்
Updated on : 16 August 2016

ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ள "ஜோக்கர்" திரைப்படத்தை திருட்டு வி.சி.டி மற்றும்  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பார்ப்பதை தடுக்கும் வகையில் போஸ்ட்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.



 



தற்கால சமூக அரசியல் குறித்து மிகச் சரியாக பேசியிருக்கும் இந்த படம், திருட்டு சி.டியால் பாதிக்காமல் இருக்கும்படி இந்த போஸ்ட்டர் சமூக வலைத்தளங்களை வலம் வருகிறது.



 



ஜோக்கர் படத்தின் நாயகனாக திரையில் அசத்தும் "மன்னர் மன்னன்" வெளியிட்டுள்ள அந்த போஸ்ட்டரில், ''திருட்டு வி.சி.டி.யில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும் ஊழலின் - சுரண்டலின் இன்னொரு அங்கம்தான்.



 



ஒரு சினிமா பல நூறு தொழிலாளர்களின் வியர்வை, சில ஆண்டு உழைப்பு. இதையும் தாண்டி திருட்டு வி.சி.டி.யில் படம் பார்ப்பவர்கள் அதற்கான நியாயமான தொகையை வங்கிக்கணக்கில் செலுத்திடுங்கள்.



 



நீங்கள் அனுப்புகிற பணம் இந்த தேசத்தில் கழிவறை இல்லாத குடிமக்களுக்கு கழிவறை கட்டித்தர பயன்படுத்தப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



திரைப்படங்களை திருட்டு விசிடி மூலம் பார்ப்பதை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஜோக்கர் படக்குழு வித்தியாசமான இந்த முறையை பயன்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா