சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!
Updated on : 22 April 2026

தமிழ் திரைப்படங்களில் தரமான கதைகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் விநியோகஸ்தர்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டின் விநியோக துறையில் குறிப்பிடத்தக்க நபராக விளங்கும் எஸ். குகன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மூலம் மாநிலம் முழுவதும் 56க்கும் மேற்பட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார்.



 



தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ள அவர், காந்தாரா, கே.ஜி.எஃப் அத்தியாயம் 2, குருப், நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் இறுகப்பற்று போன்ற திரைப்படங்கள் மூலம் தனது சிறந்த திரை ரசனையை நிரூபித்துள்ளார்.



 



தற்போது, இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கியுள்ள “பிரேக்ஃபாஸ்ட்” திரைப்படத்தை நாளை (ஏப்ரல் 24) தமிழகம் முழுவதும் வெளியிட எஸ். குகன் தயாராக உள்ளார்.



 



படம் குறித்து எஸ். குகன் பகிர்ந்து கொண்டதாவது, “‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  கதையின் நேர்மை உடனடியாக என்னை ஈர்த்தது. இந்தப் படம், தற்போதைய தலைமுறையின் உணர்வுகளை உண்மையாக பிரதிபலிப்பதுடன், நவீன காதல் மற்றும் உறவுகளை பற்றி நுட்பமாகவும் ஆழமாகவும் பேசுகிறது. உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளை நுட்பமாக சொல்வதில் தேர்ந்தவர் காந்தி கிருஷ்ணா. அதை ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. படத்தின் இளம் நடிகர்கள் திறமையாக தங்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது. உண்மையான, மனதைத் தொடும் திரைப்படங்களைத் தேடும் பர்வையாளர்களுடன் ‘பிரேக்ஃபாஸ்ட்’ ஆழமாக இணையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா