சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!
Updated on : 20 April 2026

பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் மற்றும் சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை நகரில் சிறப்பாக நடைபெற்றது. தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பாளர் சூர்யா தேவி இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.



 



அறிமுக இயக்குநர் பா. விஜய் கார்த்திக்கேயன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் பெயரிடப்படாத திரைப்படத்தில் காளி வெங்கட் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் ரேஷ்மா முரளிதரன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.



 



இந்த திரைப்படத்திற்கு தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். பாடல்களை விவேக், கார்த்திக் நேத்தா, கவிஞர் சாரதி, உமாதேவி ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தொகுப்பை சக்தி திரு கவனிக்க, கலை இயக்கத்தை ஹாசினி மேற்கொள்கிறார். சண்டைப் பயிற்சியை ராம்போ விமல் அமைக்க, ஆடை வடிவமைப்பை கவிதா மேற்கொள்கிறார். நடன அமைப்பை ராதிகா கவனிக்கிறார்.



 



குடும்பத்தை மையமாகக் கொண்ட இப்படம், 1995ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு, அரசுப்பள்ளியில் படிக்கும் தனது மகனை தனியார் பள்ளியில் சேர்க்க போராடும் ஒரு தந்தையின் உணர்ச்சிகரமான பயணத்தை வெளிப்படுத்துகிறது.



 



*படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''1995 அரசுப்பள்ளியில் படிக்கும்‌ தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைக்க போராடும் ஒரு தந்தையின் கதையை மையப்படுத்தி குடும்ப உணர்வுகளை கொண்டு உருவாக இருக்கிறது. குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் பார்க்க கூடியதாக இருக்க இப்படம் தயாராகிறது. இதற்காக சிவகங்கை மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடத்துகிறோம் '' என்றார்..

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா