சற்று முன்

உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |   

சினிமா செய்திகள்

விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!
Updated on : 08 April 2026

விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட “முண்டாசுப்பட்டி”, “ராட்சசன்” ஆகிய பிளாக்பஸ்டர் படங்களின் வெற்றி கூட்டணியான விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படம் “இரண்டு வானம்”. இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது திரையுலகிலும் ரசிகர்கள் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



 



தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை வழங்கிய சத்தியஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் முன்னேற்றமான தொழில்நுட்ப அம்சங்களுடன், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது.



 



இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். புதிய ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 



வலுவான கதைக்களம், பிரபல கூட்டணி மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு காரணங்களால் “இரண்டு வானம்” படம் வெளியாவதற்கு முன்பே திரையுலகில் பேசப்படும் முக்கிய படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.



 



“இரண்டு வானங்கள், ஒரே பார்வை” என்ற மையக் கருத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் கோடை காலத்தில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா