சற்று முன்

உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |   

சினிமா செய்திகள்

ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்
Updated on : 07 April 2026

நடிகர் ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய திரைப்படமான “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக மூன்றாவது சிங்கிள் பாடலை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது. சமூக அக்கறையும் அரசியல் பின்னணியும் இணைந்த இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.



 



இந்தப் பாடல், மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுதிய புகழ்பெற்ற “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வரிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், மதுரை ராப் இசைக்குழு மதுரை சோல்ட்ஜர்ஸ் உடன் இணைந்து பாடலை உருவாக்கியுள்ளார். சமூக அவலங்களையும், தற்போதைய அரசியல் சூழலையும் ஆவேசமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடலை கிரிஷ் மற்றும் மதுரை சோல்ட்ஜர்ஸ் இணைந்து பாடியுள்ளனர்.



 



தேர்தல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், சமூக விழிப்புணர்வை தூண்டும் நோக்கில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



 



BV Production நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் பாபு விஜய் இயக்கியுள்ள இப்படம், சமகால பிரச்சனைகளை பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் ஜெய் நாயகனாகவும், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



மனித வாழ்க்கையில் நிகழும் அதிர்வுகள், உணர்வுகள் மற்றும் சமூகத்தின் கடுமையான உண்மைகள் ஆகியவற்றை பிரதிபலிப்பதே இப்படத்தின் மையக் கருத்தாகும். நாட்டில் நடைபெறும் முக்கிய பிரச்சனைகளையும் இப்படம் தைரியமாக முன்வைக்கவுள்ளது.



 



இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளதுடன், ஒளிப்பதிவை ரிச்சர்ட் M நாதன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங்கை டார்லிங் ரிச்சர்ட்சன் செய்துள்ளார்; கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.



 



முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கு பிறகு, வரும் மே மாதத்தில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா