சற்று முன்

உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |   

சினிமா செய்திகள்

1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!
Updated on : 30 March 2026

வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்களின் தயாரிப்பில், டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் தமிழ் பதிப்பு வெளியீட்டை முன்னிட்டு, சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.



 



இந்த நிகழ்ச்சியில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர் இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர்கள் சைதன்யா மற்றும் சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.



 



1957–58 காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியுள்ளது. கேரளாவின் அந்நேர சமூக-அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை கதாபாத்திரங்களுடன் உருவாக்கப்பட்ட திரைக்கதை, ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 



இந்த படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி. ரவி, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



ஒளிப்பதிவை டிஜோ டோமி மேற்கொண்டுள்ள நிலையில், இசையை ஜேக்ஸ் பிஜாய்  அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை நௌஃபல், பிரிஜீஷ், சானுக்யா, சைதன்யா மற்றும் சரண் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த படத்தை சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.



 



இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,



''திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா - சைதன்யா - சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.



 



சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,



''இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10  ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,'' என்றார்.



 



தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,



''இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,'' என்றார்.



 



நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,



''இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,'' என்றார்.



 



நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,



''இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில்  விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.



 



நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை.  இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.



 



இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.



 



எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. '' என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா