சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்
Updated on : 02 March 2026

யாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னையின் தனித்துவமான பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம், காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் கலாச்சார மோதல்களை கலகலப்பாக சொல்ல வருவதாக டீசர் சுட்டிக்காட்டுகிறது.



 



‘ஜமா’ மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். வடசென்னை மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையில் ஒரு ஆங்கிலோ-இந்திய பெண் நுழையும் போது உருவாகும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதையின் மையமாக அமைகின்றன.



 



“வடசென்னையின் கெத்து வியாசர்படி… இல்லை இல்லை பெரம்பூர்!” என்ற வசனத்துடன் தொடங்கும் டீசர், சென்னையின் ஒரு வித்தியாசமான முகத்தை நகைச்சுவை கலந்த பரபரப்புடன் காட்டுகிறது. வீட்டுக்குள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணாதிசயங்கள், வெளியில் பக்கா லோக்கல் கெத்து – இந்த இரட்டை உலகத்தை சுறுசுறுப்பாக வெளிப்படுத்திய விதம் கவனம் ஈர்க்கிறது.



 



நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்னணி நடிகை ரோஜா முழுநீள கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.



 



டைட்டில் டீசர் மூலம் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ள ‘அன்பே டயானா’, வரும் கோடை காலத்தில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஜாலியான என்டர்டெய்னராக திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா