சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்
Updated on : 02 March 2026

வேல்ஸ் யூனிவர்சிட்டியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ‘வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ கலாச்சார விழா மாணவர்களின் உற்சாகக் கொண்டாட்டமாக அமைந்தது. இந்த விழாவில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.



 



140 கல்லூரிகளைச் சேர்ந்த 1,150 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற இந்த விழாவில், மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, கோப்பைகள் மற்றும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.



 



முதல் நாள் நிகழ்வில் இயக்குநர் பிரேம் குமார், ‘டூரிஸ்ட் ஃபேமலி’ திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவிந, நடிகர் கென்  கருணாஸ், பிரபல யூடியூபர் VJ சித்து மற்றும் ஹர்ஷத் கான், இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், பாடகி ஷிவாங்கி  கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.



 



இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் நடிகர் தனுஷ் உடன் நடிகைகள் பிரியங்கா மோகன்  மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோரும் பங்கேற்று விழாவை மேலும் சிறப்பித்தனர்.



 



நடிகர் தனுஷ் விழாவில் பேசுகையில் “நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கியுள்ளேன். 



 



எனக்கு வேல்ஸ் பல்கலைக்கழக்த்திற்கு தொடர்பு உண்டு என் முதல் படம் துள்ளுவதோ இளமை இங்கே தான் எடுத்தோம். அதுமட்டுமல்ல அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சாரிடம் பூட்ஸ் காலால் அடிவாங்கி இருக்கிறேன். 



 



பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷ்ன் மற்றும் மேனிஃபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்ட துடிக்கும் உயரங்களை அடைய உதவும் இதை பின்பற்றுங்கள்”



 



விழாவில் பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ்  “ என்னுடைய கனவு பிராஜக்ட் என்றால் அது நடிகர் தனுஷ் அவர்களை வைத்து எடுக்க இருக்கும் வட சென்னை 2 தான் என்றே கூறலாம் அதேபோல் தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது” என தெரிவித்தார். 



 



டிஜே தீபிகாவின் மிரட்டலான இசை நிகழ்ச்சி விழாவிற்கு கூடுதல் உற்சாகத்தையும் ஆற்றலையும் வழங்கியது. மாணவர்கள் உற்சாகக் குரல்களுடன் இசையின் தாளத்திற்கு இணைந்து கொண்டாடினர். இறுதியாக வானில் வெடித்த வண்ணமயமான பட்டாசுகள் இரவுக் கோளத்தை ஒளிரச் செய்து, ‘வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ விழாவிற்கு கண்கவர் நிகழ்வாக  அமைந்தது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா