சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!
Updated on : 18 February 2026

2017ஆம் ஆண்டு வெளியாகி நகைச்சுவை கலந்த ஃபாண்டசி கதைக்களத்தால் ரசிகர்களை கவர்ந்த மரகத நாணயம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.



 



சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 16, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு “கேமரா ரோலிங், ஆக்‌ஷன்!” என்று அறிவித்து படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார். திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.



 



Passion Studios, Thinkal TV, RTC Media, Axess Film Factory மற்றும் Good Show ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை இணைந்து தயாரிக்கின்றனர். முதல் பாகத்தை இயக்கிய ஏஆர்கே சரவன், இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.



 



‘மரகத நாணயம் 2’ அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் பாகத்தை விட அதிக நகைச்சுவை, மேஜிக் மற்றும் சுவாரஸ்ய திருப்பங்களுடன் இந்த இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்படுகிறது.



 



தற்போது தொடங்கியுள்ள படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், நடிகர் பட்டியல் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த ஃபாண்டசி-காமெடி தொடர்ச்சி, மீண்டும் ஒரு முறை வெற்றி நாணயமாக மாறுமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா