சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு
Updated on : 18 February 2026

மழைக்காடுகளில் நடைபெறும் மட் ரேஸ் போட்டியை மையமாக கொண்டு உருவான மட்டி மூலம் கவனம் பெற்ற இயக்குநர் டாக்டர் பிரகபல், தனது அடுத்த படைப்பான ‘ஜாக்கி’ மூலம் மீண்டும் பாராட்டுகளை குவித்து வருகிறார். கடந்த ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜாக்கி’, தொடர்ந்து நான்கு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



 



PK7 Studios தயாரித்து வழங்கியுள்ள ‘ஜாக்கி’, மதுரையை களமாகக் கொண்டு நடைபெறும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக வைத்து உருவான முதல் திரைப்படமாக திகழ்கிறது. மண் மணத்தையும், மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும் திரையில் உணர்த்தும் வகையில் படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.



 



படம் குறித்து பேசிய டாக்டர் பிரகபல், “இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் சில நாட்கள் ஓடுவதற்கே சவால். ஆனால் ‘ஜாக்கி’ நான்கு வாரங்களாக வெற்றிநடை போடுகிறது. ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் அளிக்கும் ஆதரவு எங்களுக்கு பெரிய ஊக்கமாக உள்ளது,” என்று தெரிவித்தார்.



 



‘மட்டி’ படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் இந்த படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார். மேலும் பல திரைப் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.



 



இப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். கிரியேட்டிவ் ப்ரொடியூசராக ஆர்.பி. பாலா பணியாற்றியுள்ளார். தொழில்நுட்பக் குழுவின் ஒத்துழைப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.



 



மதுரையின் கலாச்சாரத்தை திரையில் உயிர்ப்பிக்கும் ‘ஜாக்கி’, உள்ளூர் விளையாட்டை தேசிய அளவில் பேசப்படும் வகையில் மாற்றியுள்ள திரைப்படமாக திகழ்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடை போடும் இப்படம், தரமான உள்ளூர் கதைகளுக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா