சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்
Updated on : 18 February 2026

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக பிரபலமான இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’ தற்போது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



 



சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணையுவது இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பாக பார்க்கப்படுகிறது. இவர்களுடன் கன்னட முன்னணி நட்சத்திரம் ராஜ் B ஷெட்டி, நடிகர் கிஷோர், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



இப்படத்திற்கு இசையமைப்பது இசைஞானி இளையராஜா. அவரது இசை இப்படத்திற்கு முக்கிய பலமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். தற்போது இசைப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



 



‘பாக்கெட் நாவல்’ படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது தயாரிப்பு நிறுவனமான Tyler Durden And Kino Fist (TDKF) மூலம் தயாரிக்கிறார். கொலைகாரன் மற்றும் வதந்தி போன்ற படைப்புகளை இயக்கிய Andrew Louis இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார்.



 



ஒளிப்பதிவை Nirav Shah கவனிக்கிறார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் எடிட்டிங் மூலம் கவனம் பெற்ற சத்யராஜ் நடராஜன் இந்தப் படத்திலும் இணைந்துள்ளார். கலை இயக்குநராக வே. சண்முகராஜா பணியாற்றுகிறார்.



 



இப்படத்தின் இசை உரிமையை Think Music கைப்பற்றியுள்ளது. மேலும் டிஜிட்டல் உரிமைகள் தொடர்பாக முன்னணி ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



 



இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தில் ‘பாக்கெட் நாவல்’ வெளியிடப்பட உள்ளது. வித்தியாசமான கதை சொல்லல், பலம் வாய்ந்த நடிப்பு அணியும், இசைஞானியின் இசையும் இணையும் இந்த படம், தியாகராஜன் குமாரராஜாவின் திரைப்பட பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா