சற்று முன்

மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |   

சினிமா செய்திகள்

சென்னைக் கடற்கரையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘வித் லவ்’ படக்குழுவினர்!
Updated on : 03 February 2026

தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு மைல்கல்லாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 ட்ரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவினரின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக உருவான காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த அபூர்வமான நிகழ்வை நேரில் கண்ட பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தியதுடன், அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.



 



Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வித் லவ் (With Love)’ திரைப்படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.



 



பட வெளியீட்டை முன்னிட்டு பல்வேறு புதுமையான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் படக்குழு, அதன் ஒருபகுதியாகவே இந்த ட்ரோன் ஷோவை நடத்தினர். தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய அளவில், ஒரு திரைப்பட விளம்பரத்திற்காக ட்ரோன் ஷோ நடத்தப்பட்ட முதல் முயற்சி என்பதால், இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.



 



வானில் மின்னும் எழுத்துகளாக ‘With Love’ தோன்றிய தருணம், காதலின் மென்மையும், இளமை துள்ளலும் ஒருசேர வெளிப்படுத்தியதாக பேசப்பட்டது. இந்த நிகழ்வில் ‘வித் லவ்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த நினைவுகூரத்தக்க தருணத்தை பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரத்தைத் தாண்டி, இது ஒரு நவீன கலை நிகழ்வாகவும் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.



 



அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K. சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.



 



சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த ட்ரோன் ஷோ வீடியோக்கள், ‘வித் லவ்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. ‘வித் லவ் (With Love)’ திரைப்படம் 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா