சற்று முன்

மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |   

சினிமா செய்திகள்

மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”
Updated on : 30 January 2026

இந்திய சினிமாவின் எதிர்பார்ப்பை மீறிய படங்களில் ஒன்றாக “வாரணாசி” உருவாகி வருகிறது. நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் முதல் படம் இது. Sri Durga Arts மற்றும் Showing Business சார்பில் K.L. நாராயணா மற்றும் S. S. கார்த்திகேயா இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.



 



கடந்த நவம்பரில் நடைபெற்ற பிரம்மாண்டமான க்ளிம்ப்ஸ் நிகழ்வு, ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. இந்த க்ளிம்ப்ஸில் கதையின் நாயகன் ருத்ரா காலத்தையும் நில பரிமாணங்களையும் கடந்து பயணிக்கும் காட்சிகளை வெளிப்படுத்துகிறது – திரேதாயுகம், கி.பி. 512 வாரணாசி, கி.பி. 2027,  அண்டார்டிகா,  ஆப்பிரிக்கா,  வனாஞ்சல், திரேதாயுகம் (கிமு 7200) என தொடரும் பயணம் இதில் காணப்படுகிறது.



 



வித்தியாசமான விளம்பர யுக்திகளுக்கு பெயர் பெற்ற ராஜமௌலி, கடந்த சில நாட்களாக நகரங்கள் முழுவதும் பேனர் போஸ்டர்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, 2027 ஏப்ரல் 7 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு, புதிய போஸ்டருடன் சமூக வலைதளங்களில் இந்த தகவலை பகிர்ந்துள்ளனர்.



 



படக்குழு உறுதி அளித்ததாவது, ‘வாரணாசி’ மாபெரும், வரலாற்று சிறப்புமிக்க திரையரங்கு அனுபவமாக இருக்கும். மகேஷ் பாபு தனது கனவுப் படம் என்று வர்ணித்து, இது இந்தியா மற்றும் சர்வதேச சினிமா அரங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். “குளோப்ட்ராட்டர் (Globetrotter)” மற்றும் “டைம் ட்ராட்டர் (Timetrotter)” என்ற டேக் லைன்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா