சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Updated on : 21 January 2026

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மகிழ்ந்து, கொண்டாடும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, தனது நான்காவது தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தரமான கதையம்சம் மற்றும் வலுவான பொழுதுபோக்கு அம்சங்களை இணைப்பதே சாந்தி டாக்கீஸின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.



 



‘மாவீரன்’, ‘3BHK’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சியான் 63’ படத்தையும் சாந்தி டாக்கீஸ் தயாரித்து வரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படம் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.



 



இந்த புதிய படத்தில், வளர்ந்து வரும் நாயகனாக தனது நகைச்சுவை கலந்த இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பாரத், கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பால் பாராட்டைப் பெற்ற நடிகை சான்வி மேக்னா நடிக்கிறார். இப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி எழுதி இயக்குகிறார்.



 



இன்று (ஜனவரி 21, 2026) காலை, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. முழுப் படப்பிடிப்பும் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 45 முதல் 50 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



 



நகைச்சுவை மற்றும் கதாபாத்திர நடிப்பில் தொடர்ந்து தனி முத்திரை பதித்து வரும் பாலசரவணன், இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.



 



தொழில்நுட்ப ரீதியாகவும் படத்திற்கு வலு சேர்க்கும் வகையில்,

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை கவனிக்க, சி. எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார். உடை வடிவமைப்பை கிருத்திகா சேகர் கவனித்து வருகிறார்.



 



வலுவான கதைக்களம், நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு மற்றும் புதிய அணுகுமுறையுடன் உருவாகும் இந்த ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படம், சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா