சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பார்த்து வியந்திருக்கிறேன் - நடிகர் ரவி மோகன்!
Updated on : 08 January 2026

வில்லனாக அறிமுகமாகும் நடிகர் ரவி மோகனின் ’பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பல பிளாக்பஸ்டர் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் படங்களைக் கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகர் ரவி மோகன் ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 



 



படம் பற்றி ரவி மோகன் பகிர்ந்து கொண்டதாவது, "’பராசக்தி’ சாதாரண படம் அல்ல! எண்ணற்ற கடின உழைப்பாளிகளின் அர்ப்பணிப்பால் உருவான தலைசிறந்த படைப்பு இது. என் மீது நம்பிக்கை வைத்து மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என் சினிமா பயணத்தின் இந்த தருணத்தில் நான் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என பலர் கேள்வி எழுப்பினர். நான் ’பராசக்தி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள முக்கிய காரணம் சுதா கொங்கரா மேடம் தான். அவரது படங்கள் எனக்கு எப்போதும் உத்வேகம் கொடுக்கும். அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.



 



”அதர்வா முரளி ஒரு அற்புதமான சக நடிகர். அவரது பாசிட்டிவ் எனர்ஜியை செட்டில் எல்லோரும் உணர்ந்தோம். இந்தப் படத்தில் அவரது நடிப்பும் கதாபாத்திரமும் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பது உறுதி. ஸ்ரீலீலா அற்புதமான நடிகை. ‘பராசக்தி’ படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ்நாட்டில் இன்னும் நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள்”.



 



”சிவகார்த்திகேயன் மீது எனக்கு அளவுக்கடந்த அன்பு உள்ளது. பல தருணங்களில் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன். படத்தில் அவர் மற்றவர்களை ஓவர்ஷேடோ (overshadowed) செய்கிறார் என்று ஒரு செய்தி உலவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. என்னுடைய கதாபாத்திரம் ஆழமானதாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதா என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இப்போதுள்ள முன்னணி கதாநாயகர்கள் அப்படி செய்வார்களா என தெரியவில்லை. சிவகார்த்திகேயனின் அன்பு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு இவை எல்லாம்தான் அவரது வளர்ச்சிக்கு காரணம்” என்றார். 



 



”குறுகிய காலத்திலேயே நூறு படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ‘பராசக்தி’ படத்தில் அவரது அற்புதமான இசையை நிச்சயம் விரும்புவீர்கள்”.



 



”’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். படம் வெளியாவதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துள்ளேன். படம் பார்த்த பெருமையிலும் சந்தோஷத்திலும் சொல்கிறேன், நிச்சயம் ‘பராசக்தி’ உங்கள் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும். படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை ’பராசக்தி’ திரைப்படம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார். 



 



டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா