சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

“மூன்வாக்” படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படும் ரசிகர்கள்!
Updated on : 05 January 2026

வரலாற்றில் முதல் முறையாக, இசை மாமேதை ஏ.ஆர்.ரஹ்மான், மூன்வாக் ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் தானே பாடியிருப்பதுடன், இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார்.



 



நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மூன்வாக்” திரைப்படத்தின் மாபெரும் ஆடியோ வெளியீட்டு விழா, மறக்க முடியாத இசை இரவாக மாறியது.



 



அந்த மாலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் அசத்தலான  நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, ரசிகர் கூட்டத்தை பெரிதும் உற்சாகப்படுத்தியது.



 



இயக்குநர் மனோஜ் NS, இத்திரைப்படத்தை உண்மையிலேயே நினைவில் நிற்கும் ஒன்றாக உருவாக்க உதவிய  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், மூன்வாக் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு பேரானந்தமும் மகிழ்ச்சியும் தரும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.



 



ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் முதல் முறையாக தோன்றிய தருணத்தில் உற்சாகம் உச்சத்தை எட்டியது. உடனடியாக அவர், “மூன்வாக்” திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் தொடர்ச்சியாக நேரடியாகப் பாடி, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி, அந்த மாலையை உண்மையான இசை கொண்டாட்டமாக மாற்றினார்.



 



இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா, எப்போதும் போல ஆற்றலுடனும் உற்சாகத்துடனும், மூன்வாக் திரைப்படத்தின் ஐந்து பாடல்களுக்கும் ஆடி, பிரமாண்டமான 10 நிமிட நடன அஞ்சலியை,  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அர்ப்பணித்து, வழங்கினார்.



 



அவரது ஆர்வம், துல்லியம் மற்றும் ஒப்பற்ற ஆற்றல், காலம் அவரது மேஜிக்கை குறைக்கவில்லை என்பதை நிரூபித்ததுடன், ரசிகர்களை மேலும் மேலும் அவரது நடனத்தைக் காணும் ஆவலைத் தூண்டியது.



 



அவர் தனது இணை நடிகர்களான யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ் மற்றும் நடன இயக்குநர் சேகர் ஆகியோருடன் இணைந்து மேடையில் நடனமாடி, அந்த இரவை மேலும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் மாற்றினார்.



 



நடிகர் யோகி பாபு, இந்த திரைப்படத்தில் 16 விதமான வேடங்களில் நடித்திருப்பதாக தெரிவித்து, இது கதையை முன்னெடுத்து செல்லும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறினார். இதுவரை வெளியிடப்பட்ட மூன்று தோற்றங்களே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் பல வேடங்கள் வெளிவரும் என தெரிவித்தார்.



 



நடிகர்கள் அஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன், தங்களின் சரளமான தமிழ் பேச்சுகளால் பார்வையாளர்களை கவர்ந்தனர். பிரபுதேவா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து நடித்த இந்த சிறப்பு திரைப்படத்தின் ஒரு பகுதியாக தாங்கள் இருப்பது  மகிழ்ச்சி எனத் தெரிவித்தனர். அர்ஜுன் அசோகனின் 'மூன்வாக் நடன' அசைவிற்கு பார்வையாளர்களிடமிருந்து சிறப்பு கைதட்டல் கிடைத்தது.



 



நடிகர்கள் சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, தீபா அக்கா, டாக்டர் ஜேக்கப் மற்றும் ராம்குமார் ஆகியோரும், இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, தங்களுக்குக் கிடைத்த கதாபாத்திரங்களுக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.



 



நடிகர் ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்கள் விழாவில் கலந்துகொண்டு, திரைப்படத்திற்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.



 



சிவமணி, பாபா பாஸ்கர், சான்வீ மேக்னா, உத்தரா உன்னிகிருஷ்ணன், பார்வதி மீனாட்சி, வி அன்பீடபிள்ஸ், KTV சேத்ரி, பாபா ஜாக்சன், KMJ சிம்சன், J.R. பிரபுதேவா சக்ரி, நோபல் மாஸ்டர், ஜானி மாஸ்டர், அசோக் ராஜா மாஸ்டர் மற்றும் ஸ்ரீதர் மாஸ்டர் ஆகியோரின் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் விழாவிற்கு பெரும் கலைச்சுவையையும் மகிழ்ச்சியையும் சேர்த்தன.



 



இறுதியாக, பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மானை மீண்டும் மேடைக்கு அழைத்து, புகழ்பெற்ற “முக்காலா” பாடலுக்கு அவரை நடனமாட வைத்தார். அதன் பின்னர், மூன்வாக் திரைப்படத்தின் முழு குழுவினரும், 10,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் இணைந்து, ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை கொண்டாடும் பிரம்மாண்ட கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.



 



மூன்வாக் திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் நேரடியாக அனுபவித்த ரசிகர்கள் பேரானந்தத்தில் திளைத்தனர். அதிகாரப்பூர்வ பாடல்கள் வரும் நாட்களில் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியிடப்பட உள்ளன. விளம்பர பணிகள் முழு வேகத்தில் தொடங்கவுள்ள நிலையில், மூன்வாக் திரைப்படம் 2026 மே மாதத்தில் பிரம்மாண்ட திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா