சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!
Updated on : 22 December 2025

இந்த பண்டிகைக் காலத்தில், ZEE5 தமிழ் ரசிகர்களுக்காக மனதைக் கொள்ளை கொள்ளும், சிரிப்பும் உணர்வும் கலந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையின் கதையை   கொண்டு வருகிறது. மிடில் கிளாஸ்,  எனும் தமிழ் காமெடி - டிராமா திரைப்படம், டிஜிட்டல் பிரீமியராக, டிசம்பர் 24 முதல் ZEE5-ல் வெளியாகிறது. கிஷோர் M. ராமலிங்கம் இயக்கத்தில், தேவ் மற்றும் K.V. துரை தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில், காளி வெங்கட், முனிஷ்காந்த், விஜயலட்சுமி மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



“மிடில் கிளாஸ்” திரைப்படம், நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அன்றாட நடைமுறை சிக்கல்களை, ஒரு மனிதன் நீண்ட காலமாக சுமந்து வந்த கனவை அடைய முயலும் பயணத்தை, நகைச்சுவையும் உணர்ச்சியும் கலந்து சொல்லுகிறது. ஆசைகள், அழுத்தங்கள், குடும்ப உறவுகள் மற்றும் குழப்பங்கள் இவை அனைத்தையும் இயல்பாகப் பிரதிபலிக்கும் இப்படம், சிரிப்போடு சேர்த்து மனதையும் நெகிழ வைக்கிறது.



 



கதையின் மையத்தில், சாதாரண மனிதர்களின் ஆசைகள்,  ஒரு குடும்பத்தின் அன்றாட  இயக்கங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இடம்பெறுகின்றன. அதிகமாக வெளிப்படுத்தாமல் சொல்ல வேண்டுமெனில், கனவும் நிஜமும் மோதும் இடங்களில் உருவாகும் சூழல்கள், சில சமயம் கலகலப்பாகவும், சில சமயம் மனதைத் தொடுவதாகவும் அமைகின்றன. எளிமையும் உண்மையும் தான் இப்படத்தின் பலம்.



 



இப்படம் குறித்து முனிஷ்காந்த் கூறியதாவது.., 



“மிடில் கிளாஸ்” படம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கை மற்றும் கனவுகளை பிரதிபலிப்பதால், பார்வையாளர்களுடன் எளிதாக இணையும். இப்படத்தின் நகைச்சுவை நிஜமான வாழ்க்கையிலிருந்து வருகிறது. அது தான் இப்படத்தை சிறப்பாக்குகிறது. என் கதாபாத்திரத்தில் நடித்தது அருமையான அனுபவமாக இருந்தது. இப்படத்தில் நகைச்சுவைக்கு  இணையாக உணர்ச்சிப்பூர்வமான தருணங்களையும் ரசிகர்கள் ரசிப்பார்கள். இந்த பண்டிகைக் காலத்தில் ZEE5-ல் படம் வெளியாகிறது என்பது பெரும் மகிழ்ச்சி.”



 



இந்த கிறிஸ்துமஸில் மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரைத்  தவறவிடாதீர்கள் — டிசம்பர் 24 முதல் ZEE5-ல் மட்டும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா