சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!
Updated on : 26 November 2025

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் 'திரௌபதி 2' படத்தில் இருந்து திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடனின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குநர் மோகன்.ஜி-யின் கதையில் மிகத்தீவிரமான, ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் இந்த கதாபாத்திரம் 'திரெளபதி' ஃபிரான்சைஸில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். 



 



நேதாஜி புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து சோழ சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் 'திரௌபதி 2' திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'திரௌபதி' திரைப்படத்தின் நீட்சியாக அதன் வரலாற்று உலகத்தை காட்ட இருக்கிறது.  14 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த திரைப்படம், ஹோய்சால பேரரசர் வீர வள்ளலார் III இன் இரத்தக்கறை படிந்த ஆட்சி, சேந்தமங்கலம் காடவராயர்களின் வீரம், எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டின் முகலாய படையெடுப்பால் உண்டான கொந்தளிப்பு ஆகியவற்றின் பின்னணியில் கதை விரிவடைகிறது. கடந்த காலத்தின் இந்த பிரமாண்டமான மறுகட்டமைப்பில், திரௌபதி தேவியின் முதல் பார்வை போஸ்டர் அறிமுகம், படத்தின் உணர்ச்சிகரமான தருணத்தை இரண்டாம் பாகத்துடன் வலுவாக இணைக்கும் புள்ளியாக மாறுகிறது. 



 



முதல் பார்வை போஸ்டரில் நடிகை ரக்ஷனா இந்துசூடன் கலாச்சார ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்ணியத்துடனும் கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறார். அவரது கதாபாத்திரம் கதைக்களத்தின் வரலாற்று மற்றும் உணர்ச்சி தருணங்களை ஆழமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, படத்தின் கருவான பெண் சக்தியை பிரதிபலிக்கிறது. 



 



ரிச்சர்ட் ரிஷி மற்றும் ரக்ஷனா இந்துசூடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க இவர்களுடன் நடிகர் நட்டி நட்ராஜ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் இந்த வரலாற்றுக் கதையில் நடித்துள்ளனர். 



 



போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தின் வெளியீட்டை ஒட்டி அதன் புரோமோஷனல் பணிகள் நடைபெறும். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா