சற்று முன்

'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!   |    விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!   |    100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை   |    TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது   |    எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!   |    தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!   |    மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!   |    'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   |    மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஆர்யன்' பட டீசர் வெளியானது!   |    'தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் உருவாகியுள்ள 'வீர தமிழச்சி'!   |    நடிகர் சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு 'யாத்திசை' படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியானது!   |    ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' டிரெய்லர்!   |    VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |   

சினிமா செய்திகள்

தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!
Updated on : 06 October 2025

தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி OTT வெளியீடாக “ராம்போ” திரைப்படத்தை, வரவிருக்கும் தீபாவளி சிறப்பு படமாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுகிறது.



 



அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள “ராம்போ” நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.



 



ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன்,  ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் முத்திரை இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன், அதிரடி, ஆக்சன் நிரம்பிய அழுத்தமான படமாக இப்படம் வெளிவரவுள்ளது. 



 



படம் குறித்து இயக்குநர் முத்தையா கூறியதாவது..,  “இந்தப் படம் எனது பாணியிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய கதையை வேறு பாணியில் சொல்லும் வாய்ப்பை எனக்கு வழங்கியது. அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிந்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. ‘ராம்போ’ படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள்  என்று நம்புகிறேன்.”



 



பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகிறார். மேலும் மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன்  கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் முக்கியமான  வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர்.



 



பிரபல ஒளிப்பதிவாளர்  R.D. ராஜசேகர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நகரப் பின்னணியில் ஆக்சன், அதிரடி மற்றும் உணர்ச்சிரமான பொழுதுபோக்கு படமாக “ராம்போ” உருவாகியுள்ளது.



 



படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.



 



இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க, அக்டோபர் 10ஆம் தேதி முதல் “ராம்போ” படத்தை  சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்த்து ரசியுங்கள்!

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா