சற்று முன்

அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |   

சினிமா செய்திகள்

'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!
Updated on : 27 September 2025

இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் தி பாரடைஸ், ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களின் ஆவலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘ஜடால்’ வேடத்தில் நானியின் லுக் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதேலா படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மிகுந்த நுணுக்கத்துடன் வடிவமைத்து வருகிறார், இதுவரை அவர் தந்து வரும்  ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களைப் பெரிய அளவில் உற்சாகப்படுத்தி வருகிறது. 



 



இன்று, "தி பாரடைஸ்"  படக்குழு, சினிமா வரலாற்றில் தனித்துவமான இடம் பிடித்த மூத்த நட்சத்திரம் மோகன் பாபுவை ‘ஷிகன்ஜா மாலிக்’ என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.



 



நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்குத் திரும்பும் மோகன் பாபுவின் இந்த வேடம், அவர் பழைய "வின்டேஜ்" அழகை மீண்டும் உயிர்ப்பிக்கும்விதமாக அமைந்துள்ளது. கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சொன்னவுடன் மோகன் பாபு பெரும் உற்சாகத்துடன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர் நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் புதிய லுக், அவரது செல்லப்பெயரான  "டைலாக் கிங்" க்கு ஏற்ப தத்ரூபமாக உள்ளது.



 



அழுத்தமான, சக்திமிகுந்த மற்றும் ஸ்டைலான  இந்த வேடம், மோகன் பாபுவின் தனித்துவமான வசனங்களையும், தனித்துவமான நடிப்புத்திறமையையும்  வெளிப்படுத்தவிருக்கிறது. இந்தக் கதாபாத்திரம் படத்தின் முக்கிய ஈர்ப்பாக மாறி, ரசிகர்களுக்கு ஒரு புதிய அவதாரத்தைத் தரப்போகிறது.



 



சுதாகர் செருகுரி தயாரிப்பில், எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். "தி பாரடைஸ்"  படம் 2026 மார்ச் 26ஆம் தேதி உலகளவில் 8 மொழிகளில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம், மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமாவை உலகளவில் கொண்டாடவிருக்கும் இந்த "பான்-வேர்ல்ட்"  பிரம்மாண்ட படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா