சற்று முன்
சினிமா செய்திகள்
25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் காமெடி கூட்டணி!
Updated on : 26 August 2025

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் “Production no 4”, படத்தின் பூஜை இன்று துபாயில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (sam rodrigues) எழுதி இயக்குகிறார்.
இப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள், லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
தமிழ் திரையுலகில் மறக்க முடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு கூட்டணியாகும். இவர்கள் ஒன்றிணைந்தாலே திரையரங்கில் சிரிப்பு மழை பொழியும். வயிறு குலுங்க சிரிக்க வைத்து, ரசிகர்கள் மனதில் இன்றளவிலும் நீங்காத இடம் பிடித்த, இந்தக் கூட்டணியுடன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இந்த புதிய படத்தில் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார்.
பிரபுதேவா, வடிவேலு கூட்டணியின் அத்தனை டிரேட் மார்க் அம்சங்களுடன், ஒரு கலக்கலான ஆக்சன் அட்வென்ச்சர் ( Action Adventure ) படமாக இப்படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (sam rodrigues).
முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டண்ட் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை கையாளுகிறார்.
இப்படத்தில் அனிமல், ஏஸ் வெற்றிப்படங்களுக்குப் பிறகு, நடிகர் பப்லு பிரித்திவிராஜ் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
KRG நிறுவனத்தின் நான்காவது படைப்பாக உருவாகும் இப்படத்தினை தயாரிப்பாளர் கண்ணன் ரவி, மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், மற்றும் படத்தின் அப்டேட் பற்றிய விபரங்கள். ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
சமீபத்திய செய்திகள்
ஆக்ரோஷமான பாடல்காட்சியோடு தொடங்கிய ‘மலையப்பன்’ படப்பிடிப்பு
சன்லைட் மீடியா நிறுவனம் சார்பில் ஏழுமலை எஸ்.சந்திரசேகர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் குருச்சந்திரன் இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘மலையப்பன்’. மதுரை மாவட்ட கிராமம் மற்றும் மக்களின் வாழ்வியல் சார்ந்த கதையாக உருவாகும் இப்படத்தின் மூலம் இயக்குநராகவும், நாயகனாகவும் அறிமுகமாகும் குருச்சந்திரன், பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
`குருச்சந்திரன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபல இயக்குநர்கள் சுப்பிரமணிய சிவா, பேரரசு, ஷரவண சுப்பையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
’லோக்கல் சரக்கு’ மற்றும் ‘கடைசி தோட்டா’ படங்களுக்கு இசையமைத்த வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கும் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு ரகமாக மக்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தின் பாடல் ஒன்றை பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பாட இருக்கிறார்.
சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கிய ‘மலையப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏழுமலை நகரில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் நேற்று (ஆகஸ்ட் 27) தொடங்கியது.
“வேஷங்கட்டிக்கிட்டு...” என்று தொடங்கும் வீரமிக்க மற்றும் உத்வேகம் தரக்கூடிய முதல் பாடல்காட்சியோடு தொடங்கிய படப்பிடிப்பில், இணை இயக்குநர் மூதுரை பொய்யாமொழி, ஆக்ஷன் சொல்ல, நடன இயக்குநர் இராம்தாஸ் முருகன் நடன அமைப்பில், இயக்குநரும் கதையின் நாயகனுமான குருச்சந்திரன் சிறப்பாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்து கைதட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்றார்.
படப்பிடிப்பு துவக்க விழாவில் ஏழுமலை திருவள்ளுவர் கல்லூரி தலைவர் பெருமாள், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.ஆர்.பாண்டியன், ஊரின் முக்கிய பிரபல தொழிலதிபர்கள், ஊர் பொதும்மக்கள் மற்றும் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், இணைத் தயாரிப்பாளர்கள் திருப்பூர் செ.செல்வம், கணேஷ் ஸ்டுடியோ கோபி, சா.சுப்பையா, குஜராத் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
படப்பிடிப்பு தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கேமரா தடம் பதியாத இடங்களில் ஒரே கட்டமாக படமாக்கப்பட உள்ளது. குறிப்பாக இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத மதுரை பகுதிகளையும், அப்பகுதி மக்களின் வாழ்வியலையும் கமர்ஷியல் ஆக்ஷன் பாணியில் மட்டும் இன்றி உணர்வுப்பூர்வமாக சொல்லும் படமாக ‘மலையப்பன்’ உருவாகி வருகிறது.
தேவராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்க, காதல் மதி பாடல்கள் எழுதுகிறார். ஜெ.சரவணன் படத்தொகுப்பு செய்ய, கிளாமர் சத்யா மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
நான் இயக்குனரானால் யோகி வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் - நடிகர் ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை என்று பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “BROCODE” திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர்.
இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மணிகண்டன், கண்ணா ரவி, அர்ஜுன் அசோக், மாளவிகா மனோஜ், ரித்தீஷ், ஜெனிலியா, பேரரசு என பலர் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.
இயக்குனர், தயாரிப்பாளர் & நடிகர் ரவி மோகன் பேசும்போது,
என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி இந்த தருணத்தில் நான் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.
நான் இயக்குனர் ஆகி விட்டேன். நான் இயக்குனர் ஆகினால் யோகி வைத்ததால் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதற்கான புரோமோவும் எடுத்துவிட்டேன். இன்று என்னுடைய இரண்டு படங்களின் பூஜையும் ஒரே நேரத்தில் நடப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
கார்த்தியும் நானும் ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது தாய்லாந்தில் சாலையில் அவ்வப்போது பேசிக்கொண்டே நடந்து போவோம். அப்போது எங்களுடைய மீசை, தாடி, உடைகளை பார்த்து இருவரும் அண்ணன் தம்பிகளா என்று பலர் கேட்டிருக்கிறார்கள். அந்த ப்ரோ கோட்-ம் அன்பும் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
சினிமா... கோடிக்கணக்கான மக்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சி. திரையரங்கில், யாரோ ஒருவரின் வசனமும் நடிப்பும் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும், கண்ணீர் சிந்தவும் செய்கிறது. பலரின் உழைப்பால் தான் ஒரு படம் உருவாகிறது. அந்தப் படங்களில் மக்களால் விரும்பப்பட்டவை வெற்றியை அடைகின்றன. பல நல்ல படங்கள் மக்களால் காலங்கள் கடந்தும் இன்னமும் கொண்டாடப்படுகின்றன.
ஒரு சாதாரண நபரை கூட, உலகம் கொண்டாடும் ஒரு பிரபல நட்சத்திரமாக மாற்றும் சக்தி சினிமாவுக்கே உண்டு. அதில் நானும் ஒருவன் தான்.
எனக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்தது என் ரசிகர்கள். அவர்கள் எனக்குக் கொடுத்த பரிசு – இந்த சினிமா. நடிப்பதைக் கடந்து, சினிமாவில் நான் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவது நிறைய இருக்கிறது. அது, நான் நீண்ட நாட்களாகக் கனவு காண்பதும்கூட.
அதில் ஒன்று தான் ரவி மோகன் ஸ்டுடியோஸ் – என் சொந்த தயாரிப்பு நிறுவனம். என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படியாக, என் மனசுக்கு பிடித்த இரண்டு முக்கிய விஷயங்களை வைத்திருக்கிறேன்.
ஒன்று – இயக்குநர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நான் நடிக்கும் ப்ரோ கோட் படம்.
இன்னொன்று – நம்ம யோகிபாபுவை வைத்து, நான் முதன்முறையாக இயக்கவிருக்கும் மற்றொரு படம்.
முக்கியமாக உங்களிடம் சொல்ல வேண்டிய விஷயம் இன்னும் இருக்கு. ரவி மோகன் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டது, என்னுடைய படங்களை தயாரிப்பதற்காக மட்டுமல்ல. பலரின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கத்தான்.
அதில், முதல் முறையாக திரைப்படம் இயக்கவிருக்கும் புதிய இயக்குநர்கள், இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, முன்தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதோடு, ஓடிடி தளங்களில் கற்பனை மற்றும் ஆவணப்படத் தொடர்கள் என பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
மேலும், சரியான முறையில், நல்ல உள்ளடக்கத்துடன் உருவாக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களுக்கு ஆதரவளிக்க எப்போதும் ஒரு துணைக் கை இருக்கும். நல்ல கைத்திறமைகளுக்கு, திரை கதவுகள் திறக்கப்படும்!
புது புது பாடல்களை உருவாக்கும் சுயாதீன இசைத் திறமையாளர்களுக்கு அடையாளம் கொடுக்கவும் இதே நிறுவனம் பங்கெடுக்கிறது.
சினிமா துறையில் ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் நடிகர்களாகவும், இயக்குநர்களாகவும். அவர்களில் பலர் ஏற்கனவே ரவி மோகன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர். இன்னும் பல நண்பர்களுடன் சேர்ந்து நல்ல படங்கள் செய்ய வேண்டும்.
இதுவே எங்களின் முக்கிய நோக்கம். இது ஒரு நீண்ட பயணம். தனி ஒருவரின் உழைப்பையும் கனவையும் தாண்டி வெற்றியை அடைவதற்கு, இதில் பயணிக்கப்போகும் உங்களின் 200% பங்களிப்பும் உறுதியும் இருக்கும் என்பதே நம்பிக்கை. அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எல்லாரும் பயன் அடைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
சிவராஜ் அண்ணா எனக்காக இங்கு வந்து இந்த அளவிற்கு பேசுவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை மிக்க நன்றி அண்ணா. நான் உங்க வீட்டிற்கு வந்தேன் நீங்கள் சாப்பாடு போட்டீர்கள் உங்கள் வீட்டு உப்பை சாப்பிட்டு இருக்கிறேன் அந்த நன்றி எனக்கு எப்போதும் இருக்கும்.
கன்னடத்தில் சிவா அண்ணன் படம் தான் சூப்பர் ஹிட் ஆகும் அவருடைய படங்களை எனது தந்தை வாங்கி தெலுங்கில் வெளியிடுவார் அப்போது இருந்தே நான் சிவா அண்ணனை பார்த்து தான் வளர்ந்தேன் அவருடன் ஒரு காட்சியில் நடித்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.
ரவி மோகன் ஸ்டுடியோஸ் நன்றாக வளர்ந்த பிறகு நிச்சயம் சிவகார்த்திகேயனுக்கு அவர் விருப்பப்படி வாய்ப்பு கிடைக்கும்.
இன்று இன்னொரு இன்ப அதிர்ச்சி, நான் இயக்குனராக முடியும், தயாரிப்பாளராக முடியும் என்று நம்பிக்கையோடு உன்னால் பாடலாசிரியராகவும் ஆக முடியும் என்று கெனிஷா நம்பிக்கை கொடுத்தார். அந்த நம்பிக்கையில் நான் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். அவர் அம்மாவை பற்றி எழுத சொன்னார். ஆனால், நான் என் அம்மாவை மனதில் நினைத்து எழுதினேன். அம்மா என்பது உறவு அல்ல, உணர்வு என்று அப்போதுதான் புரிந்தது. நான் எழுதிய பாடல் வரிகளுக்கு கெனிஷாவே இசையமைத்து பாடியுள்ளார் என்றார்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பேசும்போது,
இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பு நிறுவனம் என்பது சாதாரண விஷயம் அல்ல. நம்முடைய கனவை திரையில் கொண்டு வரக்கூடிய மிகவும் பொறுப்பு மிகுந்த விஷயம். ரவிமோகன் சரி எனக்கு அவ்வளவாக தெரியாது. நான் சார் என்று தான் கூப்பிடுவேன். சினிமா துறையில் அவர் என்னைவிட சீனியர்.
பராசக்தி படத்தின் போது தான் அவருடன் நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நல்ல மனிதர் நம் அவருடைய படங்களை பார்த்து அவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒரு எண்ணம் இருக்கும். அவர் அப்படியேதான் இருக்கிறார். இந்த விழாவிற்கு என்னை அழைத்தது மட்டுமில்லாமல் நேற்று எனக்கு போன் செய்து, நாளைக்கு நிச்சயம் வந்துருங்க ப்ரோ என்று நினைவுபடுத்தினார்.
இங்கு வந்து பார்த்த பிறகு அவருக்குள் இருக்கும் அத்தனை கனவுகளும் ஒரு நடிகராக தயாரிப்பாளராக பொறுப்பேற்று என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து இருக்கிறார். ப்ரோ கோட் படத்தின் ப்ரோ மூவி திருட்டுத்தனமாக நான் பத்து நாட்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இயக்குனர் கார்த்திக் யோகி எனக்கு காண்பித்தார். எனக்கு மிகவும் பிடித்த ஜானர். அப்போதே, முதல் பாதியை காண்பித்து விட்டீர்கள், அடுத்த பாதியை எப்போது காட்டப் போகிறீர்கள் என்று கேட்டேன். அந்த அளவிற்கு மிகவும் நகைச்சுவையாக இருந்தது. ப்ரோ கோட் என்ற பெயரே சூப்பர். பெயரிலேயே அனைத்தும் வந்துவிட்டது. ரவி மோகன் ஸ்டுடியோவில் நடிகராக நீங்கள் பணியாற்றி இருக்கும் ப்ரோ கோட் படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.
அடுத்து, யோகி பாபு சாருக்கு வாழ்த்துகள். அவருடைய நகைச்சுவைக்கு அவர் எப்போதும் எல்லை வகுத்துக் கொண்டதே கிடையாது. ஆர்டினரி மேன் உடைய வாழ்க்கை ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி பயணமாக இருக்கும் என்பதை கூறுவது தான் இந்த படம். அதுக்கு பொருத்தமானவர் யோகி பாபு தான். ஆனால் அவரிடம் கேட்டால் குரு நான் காமெடி நடிகன் என்பார். ஆனால், அவருக்குள் ஒரு ஹீரோ இருக்கிறார் என்பதை படத்தை பார்த்தால் தெரியும்.
ஒரு நடிகர் இயக்குனர் ஆவது சாதாரண விஷயம் அல்ல. சிறு வயது முதலே சினிமாவில் பயணித்ததால் அந்த நம்பிக்கை அவருக்கு வந்திருக்கிறது. எல்லோருக்கும் இயக்குனராக வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால், எல்லோராலும் ஒரு படத்தை இயக்கி விட முடியாது. அதேபோல், எல்லா நடிகர்களுக்கும் இயக்குனராகும் தகுதி வந்து விடாது. ஆனால், ரவி மோகனுக்கு இருக்கிறது. அடுத்து கார்த்தியும் படம் இயக்குவார் என்று நம்புகிறேன். அவருக்குள்ளும் இயக்குனர் இருக்கிறார். அதேபோல், மணிகண்டனும் விரைவில் இயக்குனர் ஆகி விடுவார் என்று நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.
இப்படத்தின் ப்ரோமோ பார்க்கும்போது நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிகிறது. ரவி மோகன் இயக்கும் ஆர்டினரி மேன் படமும் வெற்றியடைய வாழ்த்துகள்.
அடுத்து காக்கி ஸ்குவாட். இப்படத்தின் டீசர் பார்த்தேன். நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. கண்ணா ரவியுடைய மண்டேலா, குருதி ஆட்டம், இப்போது கூலி வரைக்கும் அவருடைய நடிப்பை பார்த்து வருகிறோம். அதேபோல் இந்த படத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இப்படத்தின் இயக்குனர் சக்தியையும் எனக்கு தெரியும். இதற்கு முன்பு மூன்று படம் இயக்கி இருக்கிறார். எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் ஆகுவும் இருக்கிறார். எப்படி இரண்டு வேலைகளையும் செய்கிறார் என்று தெரியவில்லை.
இப்போது ரவி மோகன் ஸ்டுடியோ என்று இன்னொரு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டது. தைரியமாக ஒரு கதையை நம் தேர்வு செய்யலாம். நானும் அது போல ஒரு சில படங்களை அளித்துக் கொண்டிருக்கிறேன். இதுபோல இன்னும் ஒரு 15 தயாரிப்பு நிறுவனங்கள் வந்துவிட்டால், நிறைய நல்ல விஷயங்களை வெளிக்கொண்டு வர முடியும். எங்கள் மீது படும் வெளிச்சம் அதன் மீதும் பட்டால் இதுவரை மக்கள் எங்களுக்கு கொடுத்த இடத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தி இருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கும். இந்த மூன்று படங்களும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மூன்று படங்களின் வெற்றி விழாவிற்கும் அழையுங்கள். கண்டிப்பாக வந்து கலந்து கொள்வேன்.
நான் கல்லூரியில் படிக்கும்போது சந்தோஷ் சுப்பிரமணியம் படம் வந்தது, ஜெனிலியாவை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஜெனிலியா மற்றும் ரவி மோகனின் நடிப்பை பார்த்ததும் கல்லூரி நாட்கள் நினைவிற்கு வந்தது. இருவரும் மீண்டும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்.
ரவி மோகன் தயாரிப்பில் அல்லது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். தயாரிப்பில் அவரை விட நான் சீனியர். ஆகையால் ரவி மோகன் சார் உங்களுக்கு எப்போது சந்தேகம் வந்தாலும் என்னிடம் தாராளமாக கலந்து கொள்ளலாம்.
பராசக்தி படத்தில் நானும் ரவி மோகன் சாரும் நடித்ததை பற்றி கூறுவதற்கு நிறைய இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் வரும்போது கூறுகிறேன்.
சிவராஜ் சாரை எங்க பார்த்ததில் மகிழ்ச்சி என்றார்.
நடிகர் டாக்டர் சிவராஜ் பேசும்போது,
ஜெயம் படத்தில் இருந்து எப்போது வரைக்கும் ரவி மோகனின் வளர்ச்சி அற்புதமான வளர்ச்சியாக இருக்கிறது. அவரை எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லை ஆனாலும் அவர் படங்களை நான் பார்த்திருக்கிறேன் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்வார். குறிப்பாக சகலகலா வல்லவன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் சென்னை என்னுடைய ஊர். எனக்கு எப்போதும் சென்னை வருவது பிடிக்கும்.
சேகர் மற்றும் விஜய் பிரசாத் இருவரும் என்னுடைய பால்ய நண்பர்கள். 45 வருடங்களாக நாங்கள் நண்பர்கள். அவர்களுடன் இங்கு வந்திருக்கிறேன்.
ஆர்டினரி மேன் என்று இப்படத்திற்கு அழகாக பெயர் வைத்திருக்கிறார்கள். சுருக்கமாக ஓம் என்று அழைக்கப்படும் இப்படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும். ஏனென்றால், ஓம் என்றாலே நேர்மறையான அதிர்வலைகள் தான் அங்கு இருக்கும்.
ரவி மோகனுடன் நான் இணைந்து நடித்தால், அண்ணனாகவோ நண்பனாகவும் மெதுவாக இருந்தாலும் நேர்மறையான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பேன்.
ரவி மோகனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். கார்த்திக் சாருக்கு நன்றி என்றார்.
நடிகர் கார்த்தி பேசும் போது,
என் நண்பன் ரவி தயாரிப்பாளராக ஆகும்போது ஒரு நண்பனாக நான் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இங்கு வந்து பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தயாரிப்பு நிறுவனத்தை இவ்ளோ பெரிய விழாவாக நடத்தியதில்லை.
அதுமட்டுமில்லாமல், அவர் ஏன் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்று கூறிய போது மிகவும் பெருமையாக இருந்தது. இப்போது தன்னை கை கொடுத்து தூக்கி விட மாட்டார்களா என்று பல திறமையான இயக்குனர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரவிக்கு அப்பா இருந்தார், அண்ணன் இருந்தார். ஆனால், அனைவருக்கும் நான் இருக்கிறேன் என்று ரவி கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும், எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. ப்ரோ கோட் என்பதை கேட்கும் போது புதுசாக இருக்கிறது. ஆர்வமாக இருக்கிறது.
ரவியை நான் முதன்முதலாக பார்த்தது எப்போது என்று கூற ஆசைப்படுகிறேன். நான் சினிமாவுக்கு வரும்போது சண்டை பயிற்சி வகுப்பிற்கு சென்றேன் அங்கு தான் ரவி அண்ணனை சந்தித்தேன். சாதாரணமாக நாங்கள் மூன்று அடியில் குதித்தால் ரவி அண்ணன் 10 அடியில் குதிப்பார். ஐயையோ! சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று பயந்தேன். பிறகு எங்களை அழைத்து சென்று ஜூஸ் வாங்கி கொடுப்பார். காசு கொடுத்தால், நீங்க எல்லாம் சின்ன பசங்க காசு குடுக்க கூடாது என்று அவரே கொடுப்பார். சிறிது காலத்திற்கு பிறகு தான் அவர் என்னைவிட சின்ன பையன் என்று தெரிந்தது. அதன் பிறகு அண்ணா என்று கூப்பிட்டால் அடி விழும் என்று ரவி என்று கூப்பிட ஆரம்பித்தேன். பிறகு அவருடைய முதல் படத்தை பார்த்த பிறகு அவருடைய உடைகள் போன்று எல்லா விஷயங்களையும் பேசுவோம். அப்படித்தான் எங்களுடைய நட்பு ஆரம்பித்தது.
பொன்னியின் செல்வன் படத்தில் ரவியை பார்த்து நான் மிகவும் மகிழ்ந்தேன். ஏனென்றால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலேயே ராஜாவாக நடிக்கப் போவது யார் என்ற ஒரு கேள்வி இருந்தது. தாய்லாந்தில் படப்பிடிப்பில் அவர் ராஜாவாக உக்காந்திருந்ததை பார்த்தபோது ராஜாவுக்கு உரிய அனைத்து லட்சணங்களும் அவரிடம் இருந்தது. அதைவிட அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்றால் மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி. அதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.
இரவு உனது நேரத்தில் எனக்கு ஒர
இந்தக் கதைக்கும் பாக்யராஜ் சாரின் கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை...
இயக்குநர் சுந்தர் இயக்கத்தில் விஞ்ஞானத்தை மையமாகக் கொண்ட காதல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படம். இந்த படத்தில் ஒரு அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் கதாநாயகனாக நடித்துள்ள வினித் என்கிற அஜித்தேஜ் ஒரு வானியற்பியல் மாணவராகவும், நாயகி ஸ்ரீஸ்வேதா வழக்கறிஞராகவும் நடித்துள்ளனர். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளார். வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தனித்துவமான தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதையும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் என புது திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை நோக்கமாகவும் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்.
படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “நான் படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தபோது ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத நல்ல கதைகள் மற்றும் நல்ல சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சொல்லப்படாத பல ஜானர்களும் கதைகளும் இருக்கிறது. இதெல்லாம் இன்றைய இளம் தலைமுறையினர் எடுத்து செய்ய வேண்டும். அதேபோன்ற திறமையாளர்களுக்கு பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் வாய்ப்பளிக்க தயாராக உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதைகளை திரும்ப திரும்ப சொல்வதை விட புதுவிதமான கதைகளை சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது” என்றார்.
இயக்குநர் சுந்தர் பிரபல இயக்குநர் பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தனது ஆசானின் அனுபவத்தையும் வழிகாட்டுதலையும் பின்பற்றி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். படம் குறித்து இயக்குநர் பகிர்ந்து கொண்டதாவது, “தயாரிப்பாளர் முரளி சாரிடம் நான் கதை சொன்னபோது வித்தியாசமான கதை என்பதால் உடனே ஒத்துக் கொண்டார். 100% உண்மையான உழைப்பு கொடுத்து சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறோம். பாக்யராஜ் சாருடன் நான் இருந்ததால் அவருடைய ‘டார்லிங் டார்லிங்’ மற்றும் ‘அந்த ஏழு நாட்கள்’ என இரண்டு தலைப்புகளில் எதாவது ஒன்று தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்தேன். கதை கேட்டுவிட்டு பாக்யராஜ் சார் ‘அந்த ஏழு நாட்கள்’ பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி தலைப்பை பயன்படுத்த ஒப்புதலும் கொடுத்தார்.. மற்றபடி இந்தக் கதைக்கும் பாக்யராஜ் சாரின் கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இந்தப் படத்தில் பாக்யராஜ் சார் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை இயக்கியது எனக்கு கிடைத்த பாக்கியம். கதாநாயகன் அஜித்தேஜ் சமூகவலைதளமான இன்ஸ்டாவில் இருந்து கண்டெடுக்கப்பட்டார். கதாநாயகி ஸ்ரீஸ்வேதா கோயம்புத்தூர் பொண்ணு. இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக என் மகன் சச்சின் சுந்தர் தனது இசைப் பயணத்தை தொடங்குகிறார்” என்றார்.
இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்று வரும் நிலையில் திரைப்படம் செப்டம்பர் 12 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
பெஸ்ட்காஸ்ட் தயாரிப்பு நிறுவனம் பற்றி:
தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க தயாரிப்பு நிறுவனமான கோகுலம் ஸ்டுயோஸின் ஒப்பந்தம் முடிவடைந்ததால் அதன் உரிமையாளரான முரளி கபீர்தாஸ் அதே இடத்தில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து நடத்தி வருகிறார். தற்போது இந்த நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்ளின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இதில் முதலில் வெளியாகும் திரைப்படம்தான் ’அந்த ஏழு நாட்கள்’. மற்ற இரண்டு படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!
பதினெட்டு மைல்களுக்கு அப்பாலும் வானம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வெவ்வேறானது. முடிவில்லாத கடல், அமைதி, தொலைவு, சொல்லப்படாத காதல் எனப் பல விஷயங்கள் இதில் இருக்கிறது. இவற்றை எல்லாம் பேசும் கடலோர காதல் கதை ’18 மைல்ஸ்’ என்கிறது குழு. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவான இந்த உணர்வு
உங்கள் மனங்களை ஊடுருவி ஆன்மாவைத் தொடும். சித்து குமார் இசையமைப்பில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார்.
கே எழில் அரசுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக விரியும். நாஷின் படத்தொகுப்பும் எம். தேவேந்திரனின் கலை வடிவமைப்பும் நம் உணர்வுகளை தாலாட்டும்.
இவற்றை எல்லாம் தாண்டி நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னாவுக்கு இடையிலான காதல் காலம் தாண்டியது. அவர்களின் பார்வையும் மெளனமும் கவிதையாக பார்க்கலாம். இசையின் கடைசி ரிதம் வரையிலும் பாடலை நம் மனதால் உணரலாம்.
இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியதாவது “காதல் உலகமொழி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லைகளும் சர்வதேச நீர்நிலைகளும் காதலுக்கு இன்னும் ஒரு தடையாகவே இருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நிகழ்வு ஒன்றை காட்சி படுத்த விரும்பினேன். தற்காலிகமாக தங்குவதற்கு இடம் தேடும் ஒரு அகதி கடலின் சட்டத்தை இயற்றுபவரின் இதயத்தில் இடம் பிடிக்கிறார். மனிதர்களின் உணர்வுகளுக்கு கடலும் அதன் அலையும் மெளன சாட்சியாக எப்போதும் இருக்கும். கடலை போலவே காதல் அழகானது. அதே சமயத்தில் கடலின் ஆழத்தை போல ஆபத்தானதும் கூட! நிலம்தான் இங்கு அரசியல். உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் நிச்சயம் இந்த கதையுடன் இணைவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
மகளிர் நலனுக்காக மாதவிடாய் சுகாதாரத்தை பேணுதல் குறித்து விழிப்புணர்ச்சி பாடல்!
பெண்கள் நலன் மேம்பட்டால் தான் ஒட்டுமொத்த சமுதாயமே முன்னேறும் என்ற உன்னத நோக்கத்தில் எண்ணற்ற சவால்களையும், தடைகளையும் வெற்றிகரமாகத் தாண்டி மிகக் குறைந்த விலையில் சானிடரி பேடுகளை தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்கி பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை கணிசமாக அதிகரித்து மத்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருதை பெற்றவர் தமிழ்நாட்டை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம்.
மாதவிடாய் காலங்களில் துணிகளை பயன்படுத்தும் சுகாதாரமற்ற முறையை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்த அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கை கதை பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் 'பேட்மேன்' என்ற படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மாதவிடாய் குறித்து மூட நம்பிக்கைகளை தகர்த்து, முழுமையான மாதவிடாய் சுகாதாரத்தை பேணுதல் குறித்து விழிப்புணர்வை உருவாக்க தனது அடுத்த லட்சிய பயணத்தின் முக்கிய பகுதியாக இது குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்குவதற்காக பிரபல கவிஞர் பா. விஜய்யுடன் அருணாச்சலம் முருகானந்தம் இணைந்துள்ளார்.
இந்த பாடல் குறித்து அறிவிப்பு பெண்கள் சமத்துவ நாளான இன்று (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்டது. இது குறித்து பேசிய.அருணாச்சலம் முருகானந்தம், "மாதவிடாய் மற்றும் கருப்பை சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மிகப் பெரிய அளவில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று ஒரு தொய்வை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் முழுமூச்சாக இதில் நாங்கள் இறங்கி உள்ள நிலையில் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதத்தில் இந்த பாடலை உருவாக்க உள்ளோம்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தப் பாடலை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளில் இப்பாடல் வெளியிடப்படும். பெண்களின் சுகாதாரத்தை பாதுகாக்க பெண்கள் சமத்துவ நாளான இன்று உறுதி ஏற்கிறோம்," என்று கூறினார்.
துபாயை தலைமையிடமாக கொண்ட இந்திய தொழிலதிபரும் முதலீட்டாளருமான தாரா கிரியேஷன்ஸ் சுதிர் இதை தயாரிக்கிறார். அவர் பேசுகையில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும். இந்த படைப்பை நாங்கள் அர்பணிக்கிறோம்.
பா. விஜய் இந்த பாடலின் தமிழ் வரிகளை எழுதுகிறார், இதன் முதன்மை ஆலோசகர் அவினாசி ஜோதி லிங்கம் ஆவார்!
தமிழக முதல்வரை சந்தித்த சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!
சமீபத்தில் நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்கம் தேர்தலில் (2025-2028), சின்னத்திரை வெற்றி அணி சார்பாக தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட பரத், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நவிந்தர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கற்பகவல்லி மற்றும் அனைத்து வேட்பாளர்களும் (23 பேர்) வெற்றி பெற்றனர்.
இதை தொடர்ந்து, வெற்றி பெற்ற அனைவரும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு மு பெ சாமிநாதன் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாண்புமிகு முதல்வரும் அமைச்சரும் வாழ்த்து தெரிவித்தனர்.
‘அக்யூஸ்ட்’ 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது!
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ திரையரங்குகளில் கடந்த 25 நாட்களாக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றி நடை போட்டு வருகிறது.
வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அக்யூஸ்ட்’, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.
'அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினரால் கொண்டாடப்பட்டது. திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்களின் உற்சாக பாராட்டுகளோடு படக்குழுவினர் கேக் வெட்டி 'அக்யூஸ்ட்’ வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். 'அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் தொடக்க விழா ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெற்றிருந்த நிலையில் அதன் வெற்றி கொண்டாட்டமும் அதே திரையரங்கில் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அவரது கேப்டன் ஆலயம் நினைவிடத்திற்கு சென்ற நடிகர் உதயா உள்ளிட்ட 'அக்யூஸ்ட்' படக்குழுவினர் அங்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
இது குறித்து பேசிய உதயா, "கலை உலகத்திற்கும் திரையுலகினருக்கும் எவ்வளவோ நன்மைகளை செய்த கேப்டன் அவர்களின் பிறந்த நாளில் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இந்த வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். இதற்கு காரணமான படக்குழுவினர், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கை ஆக்குகின்றோம்," என்றார்.
'அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். நடிகர் உதயாவின் வெள்ளி விழா ஆண்டு திரைப்படமான 'அக்யூஸ்ட்', உதயாவின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.
'அக்யூஸ்ட்' படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, முன்னணி எடிட்டரான கே.எல்.பிரவீன் படத் தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம் – ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
45 நாள் ஆக்ஷன் மராத்தான் - இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார் 'ஜான் விக்’ புகழ் JJ Perry!
மும்பையின் இடையறாத மழைக்காலம் காரணமாக பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டாலும், “டாக்ஸிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” (Toxic: A Fairytale for Grown-ups) படக்குழு, அதற்கு மாறாக புயலை சவாலாக எடுத்துக்கொண்டு, அன்புடன் தழுவிக்கொண்டுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப் பெரிய ஆக்ஷன் ஷெட்யூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த 45 நாள் ஆக்ஷன் படப்பிடிப்பை, John Wick, Fast & Furious, Day Shift போன்ற படங்களில் தனது ஆக்ஷன் காட்சிகளால் உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்ற ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர் JJ Perry தற்போது மும்பையின் மத்தியபகுதியில் நடத்தி வருகிறார்.
பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் இதற்கு முன்பு பல்வேறு நாடுகளிலிருந்து சர்வதேச ஸ்டண்ட் நிபுணர்களை இணைத்திருந்த Perry, இப்போது முழுக்க முழுக்க இந்திய ஸ்டண்ட் கலைஞர்களுடன் மட்டுமே பணியாற்றத் தீர்மானித்துள்ளார். அவர்களின் அர்ப்பணிப்பையும் துல்லியத்தையும் நேரடியாகக் கண்ட பிறகு தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து JJ Perry கூறுகையில்..
“இந்திய குழு உலகத் தரம் வாய்ந்தது. அதனால்தான் நான் இவர்களுடன் பணிபுரியத் தீர்மானித்தேன். நாங்கள் தற்போது ஒரு மிகப்பெரிய சீக்குவென்ஸை எடுத்து வருகிறோம். இது ஒரு சவாலான பணி, ஆனாலும் நான் சவால்களை விரும்புவன். இந்தக் குழு அதை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது. இதுவரையிலான ஆக்சன் காட்சிகளின் எல்லைகளை கடந்து புதியதை உருவாக்குவதே எங்கள் நோக்கம் – அதுதான் சினிமா”.
மாதக்கணக்கான முன் தயாரிப்பு பணிகள் மூலம் உருவான இந்தக் காட்சி – Perry, ஹீரோவும் தயாரிப்பாளருமான யாஷ், இயக்குநர் கீத்து மோகன்தாஸ், DNEG மற்றும் தயாரிப்பாளர் வெங்கட் K. நாராயணா ஆகியோரின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. குறிப்பாக யாஷ் – வெங்கட் கே. நாராயணா கூட்டணி, பெரிய அளவிலான இந்தப் படத்திற்குத் தேவையான பெரும் பட்ஜெட்டையும், வசதிகளையும் பெற்றுத்தருவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்த ஆக்ஷன் சீக்குவென்ஸ் – ஸ்டோரி போர்டுகள், துல்லியமான பயிற்சிகள், கலை தொடர்பான விவாதங்கள் போன்றவற்றின் மூலம் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டது. இந்திய சினிமாவுக்கு புதிதாக, உயிரோட்டமுள்ள, ஒரு முழுமையான ஆக்ஷன் அனுபவத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.
“என் 35 வருட அனுபவத்தில், நான் 39 நாடுகளில் வேலை செய்திருக்கிறேன். நான் இந்திய சினிமாவின் ரசிகன். இந்திய சினிமா படைப்பாற்றலானது, கலைநயம் நிறைந்தது, துணிச்சலானது. யாஷ், கீத்து, வெங்கட் மற்றும் அவர்களின் அற்புதமான குழுவுடன் இணைவது என் வாழ்க்கையின் சிறப்பான தருணம். கீத்துவின் கலைநோக்கு பார்வை அபாரமானது. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, தயாரிப்பு வடிவமைப்பாளர் மற்றும் கலைக்குழுவின் பங்களிப்பு மிகச் சிறந்தது” என Perry பகிர்ந்துள்ளார்.
மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் படப்பிடிப்பு, இந்திய சினிமாவில் ஒரு முக்கியக் கட்டமாகும். Toxic இந்தியாவின் முதல் மிகப்பெரிய அளவிலான இருமொழிப் படம் – ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்படுகிறது. இதற்குப் பிறகு இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இத்தகைய தைரியமான முயற்சி, கதையின் உண்மைத்தன்மையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, உலகளாவிய பார்வையாளர்களையும் இணைக்கும்.
“இந்திய கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது, செழிப்பானது, பல அடுக்குகளால் ஆனது. நான் வாழும் அமெரிக்க கலாச்சாரம் சில நூற்றாண்டுகளே பழமை வாய்ந்தது. ஆனால் இங்கே வந்து, உலகளாவிய சினிமா பாணியை இந்தியக் கதைகளுடன் இணைப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. அதனால் ஏற்கனவே செய்ததை மீண்டும் செய்ய விரும்பவில்லை – புதிதாக ஒன்றை உருவாக்கவே விரும்புகிறேன். Toxic எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கிறது” என Perry கூறினார்.
வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும் “டாக்ஸிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” (Toxic: A Fairytale for Grown-ups), KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாகும். ஆழமும், அதேசமயம் கவரும் காட்சியமைப்புகளும் கலந்த இந்தப் படம், 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று புதிய வரலாறு படைத்த ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’
ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் "ஹுக்கும்"(Hukum)உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குவாத்தூர்(Kuvathur), ECR-ல் உள்ள மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று, சென்னை கண்ட மிகப்பெரிய, சிறப்பாக திட்டமிடப்பட்ட இசை நிகழ்வுகளில் ஒன்றாக, இந்த இசை நிகழ்ச்சி புதிய வரலாறு படைத்திருக்கிறது.
பரந்த வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் அரங்குகள், அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள், மருத்துவ மையங்கள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நிகழ்ச்சி எந்த தடங்கலும், இடையூறுகளும் இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. பெருமளவிலான காவல்துறை மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, முழு நிகழ்ச்சியிலும் போக்குவரத்து மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு மிகச்சிறப்பாக கையாளப்பட்டது.
ராக் ஸ்டார் அனிருத் மேடையை அதிர வைத்தார். ஹிட் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாடி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தார். குறிப்பாக வானத்தில் காட்சியளித்த ட்ரோன் (drone) நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, நிறைவு நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக அனைவரையும் ஈர்த்தது. ரசிகர்கள் பலருக்கு இது அவரது சிறந்த கச்சேரியாக நினைவில் நிறைந்தது.
"ஹுக்கும்" Hukum உலக சுற்றுப்பயண இறுதிக்கட்ட கச்சேரி, பிராண்ட் அவதார் நிறுவனத்தால் உலகத் தரத்தில் நடத்தப்பட்டு, சென்னை நேரடி இசை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிந்துள்ளது.
ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, எல்சன் எல்தோஸ் மற்றும் இரட்டை இயக்குநர்கள் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்துள்ளது.
சமீபத்தில் காரைக்குடியில் பிரம்மாண்ட பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், படத்தை ஆரம்பித்த வேகத்தில் 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளது படக்குழு.
மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, விடுதலை சேத்தன், பருத்திவீரன் சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்துள்ளனர்.
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடும் வகையில், ஒரு அசத்தலான காமெடி எண்டர்டெயினராக இப்படத்தை, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கி வருகின்றனர்.
எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் தினேஷ் காசி, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித் கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது படக்குழு. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
- உலக செய்திகள்
- |
- சினிமா