சற்று முன்

ஆக்ரோஷமான பாடல்காட்சியோடு தொடங்கிய ‘மலையப்பன்’ படப்பிடிப்பு   |    நான் இயக்குனரானால் யோகி வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் - நடிகர் ரவி மோகன்   |    இந்தக் கதைக்கும் பாக்யராஜ் சாரின் கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை...   |    எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!   |    மகளிர் நலனுக்காக மாதவிடாய் சுகாதாரத்தை பேணுதல் குறித்து விழிப்புணர்ச்சி பாடல்!   |    தமிழக முதல்வரை சந்தித்த சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!   |    ‘அக்யூஸ்ட்’ 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது!   |    25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் காமெடி கூட்டணி!   |    45 நாள் ஆக்ஷன் மராத்தான் - இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார் 'ஜான் விக்’ புகழ் JJ Perry!   |    50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று புதிய வரலாறு படைத்த ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’   |    ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!   |    அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் 'வீர வணக்கம்' பட டிரெய்லர்!   |    30 வருடங்களுக்கு மேலாக சாதனை புரிந்து வரும் நடிகை குட்டி பத்மினிக்கு சாகித்ய அகாடமி விருது!   |    'குற்றம் கடிதல் 2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!   |    மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பை கூறும் 'சிங்கா'   |    ‘மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரி   |    டிஸ்கவரி புக் பேலஸ் - MLA திரு.பிரபாகர் ராஜா தொடங்கி வைத்தார்   |    தீபாவளிக் கொண்டாட்டமாக பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் 'LIK'   |    சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியீடு!   |    கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |   

சினிமா செய்திகள்

50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று புதிய வரலாறு படைத்த ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’
Updated on : 26 August 2025

ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் "ஹுக்கும்"(Hukum)உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குவாத்தூர்(Kuvathur), ECR-ல் உள்ள மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று, சென்னை கண்ட மிகப்பெரிய, சிறப்பாக திட்டமிடப்பட்ட இசை நிகழ்வுகளில் ஒன்றாக, இந்த இசை நிகழ்ச்சி புதிய வரலாறு படைத்திருக்கிறது.



 



பரந்த வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் அரங்குகள், அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள், மருத்துவ மையங்கள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நிகழ்ச்சி எந்த தடங்கலும், இடையூறுகளும் இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. பெருமளவிலான காவல்துறை மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, முழு நிகழ்ச்சியிலும் போக்குவரத்து மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு மிகச்சிறப்பாக கையாளப்பட்டது.



 



 



ராக் ஸ்டார் அனிருத் மேடையை அதிர வைத்தார். ஹிட் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாடி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தார். குறிப்பாக வானத்தில் காட்சியளித்த ட்ரோன் (drone) நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, நிறைவு நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக அனைவரையும் ஈர்த்தது. ரசிகர்கள் பலருக்கு இது அவரது சிறந்த கச்சேரியாக நினைவில் நிறைந்தது.



 



"ஹுக்கும்" Hukum உலக சுற்றுப்பயண இறுதிக்கட்ட கச்சேரி, பிராண்ட் அவதார் நிறுவனத்தால் உலகத் தரத்தில் நடத்தப்பட்டு, சென்னை நேரடி இசை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிந்துள்ளது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா