சற்று முன்

உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |   

சினிமா செய்திகள்

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது
Updated on : 28 July 2025

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் வெகு சிலர்களில் ஜிவி பிரகாஷ்குமாரும் ஒருவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆன பின்பு நடிகராகவும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். திரைத்துறையினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 



 



தற்போது மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. 



 



படம் குறித்து ஜிவி பிரகாஷ்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “’பிளாக்மெயில்’ படத்தின் ஃபைனல் அவுட்புட் பார்த்த பிறகு, மு. மாறன் ஒரு கதை சொல்லியாகவும் இயக்குநராகவும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார் என்பது தெரிந்தது. அவருடைய முந்திய படங்களான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய இரண்டு படங்களுக்கும் நான் ரசிகன். ‘பிளாக்மெயில்’ திரைப்படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது. அனைத்து வயதினரும் தங்களுடன் இந்தப் படத்தை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். 



 



என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குநர் மாறன் தெளிவாக எழுதியிருந்தார். படத்தைப் பார்த்த பிறகு, ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். குறைந்த நேரம் வரக்கூடிய சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதியும்” என்றார். 



 



தயாரிப்பாளர் ஜெயக்கொடி அமல்ராஜ் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “அவரைப் போல நிறைய தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை. படத்திற்கு தேவையான பணம் மட்டுமே கொடுப்பது இல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஆர்வம் காட்டினார். நானும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் இந்த குணத்தை அவரிடம் பார்த்து வியந்தேன். எந்த ஒரு சவால் வந்தாலும் படத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்”.



 



தன்னுடன் நடித்த சக நடிகர்கள் பற்றி பேசும்போது,  “திரையில் மிகவும் திறமையாக தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கொண்டு வருபவர் நடிகை பிந்து மாதவி. ’பிளாக்மெயில்’ படத்தில் வலுவான கதாபாத்திரம் மூலம் அவர் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. தேஜூ அஸ்வினி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது ரசிகர்கள் இதற்கு முன்பு இவரை இப்படி பார்த்திருக்க மாட்டார்கள். ஸ்ரீகாந்த் மறக்க முடியாத கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்” என்றார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா