சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!
Updated on : 26 July 2025

திரைபடங்களைத் தாண்டி ரசிகர்களிடம் பெரும் பாசமும் பெருமிதமும் பெற்ற சிலரே உள்ளனர். அந்த வரிசையில், பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களிடம் ஒரு புரட்சி அலையை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து பலர் உற்சாகமும் நம்பிக்கையும் பெறுகிறார்கள். ரசிகர்களுக்கு அவர் வெறும் ‘டியூட்’ மட்டுமல்ல, சினிமா தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ஒரு நம்பகமான பெயராக மாறிவிட்டார்.



 



'லவ் டுடே' மற்றும் 'டிராகன்' என இரு படங்கள் மூலமாக வசூலிலும் வெற்றியிலும் உச்சத்தைத் தொட்டிருக்கும் இயக்குநர்-நடிகர் பிரதீப், தனது மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் முக்கியமான உயர்வை எளிதாகப் பெற்றிருக்கிறார் . இது பலருக்கு கனவாகவே இருந்தாலும்! மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தீபாவளிக்கு அவரது அடுத்த படம் 'டியூட்' வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



 



பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் அவரின் ஸ்பெஷல் லுக் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமாருடன் பணியாற்றிய அனுபவம் உள்ள நவீன் யெர்நேனி மற்றும் Y.ரவி சங்கர் ஆகியோர் இப்போது டியூட் படத்தை தயாரிக்கின்றனர் . "பிரதீப்பின் பிரபலத்துக்கு எல்லைகள் தாண்டி வர்த்தக வரவேற்பு இருக்கிறது. படத்தின் பூஜை நாள் முதலே வியாபாரரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது" என அவர்கள் கூறுகின்றனர்.



 



2025 தீபாவளி ரிலீஸாக இருக்கிற டியூட் ஒரு கலகலப்பான ரொமான்டிக் காமெடி படமாகும். புதிய இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கும் இப்படத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளனர். சமீபமாக இளைய நெஞ்சங்களை தன் இசையால் கொள்ளைகொண்ட இசை அமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார் ,நிகேத் பொம்மி  ஒளிப்பதிவில் , தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமி உடை அலங்காரத்தில், பரத் விக்ரமன் எடிட் செய்ய , லதா நாயுடு தயாரிப்பு நிர்வாகத்தை கையாளுகிறார் .



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா