சற்று முன்

அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |    தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியாகும் 'படை தலைவன்'   |    புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படம்!   |    விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும் - ஆர்.கே. செல்வமணி   |    சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது!   |    'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கத்தார் அரசு விருதை வென்று சாதனை!   |    'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது!   |    பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது   |    இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்   |    இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்   |    சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!   |   

சினிமா செய்திகள்

'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்
Updated on : 08 June 2025

“மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரீஃப் முகமது,  தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்ததாக, அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மிக  பிரம்மாண்டமான  அதிரடி ஆக்சன் படமான  “கட்டாளன்”  படத்தினை தயாரித்து வருகிறார். 



 



முதன்மைக் கதாபாத்திரத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் இப்படம், அடர்ந்த வனத்திற்குள்,  வாழ்க்கைக்கும் விதிக்குமான போராட்டத்தில் சிக்கியுள்ள ஒருவனின் அசாத்தியமான பயணத்தை விவரிக்கிறது.  தனது தனித்துவமான நடிப்புக்கு பெயர் பெற்ற,  ஆண்டனி வர்கீஸ், “கட்டாளன்”  படத்தில், காட்டுக்குள் வாழும் மனிதனை அச்சு அசலாக  திரையில் கொண்டு வந்துள்ளார்.



 



ஆண்டனி வர்கீஸ் உடன்  இணையும் சுனில், புஷ்பா மற்றும் ஜெயிலர் போன்ற, வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஒரு புதுமையான வலிமைமிக்க கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இதுவரை அவர் செய்த பாத்திரங்களைவிட,  முற்றிலும் மாறுபட்ட மற்றும் அதிர்ச்சியளிக்கும் அவரது தோற்றம், ரசிகர்களை மிரள வைக்கும்.



 



மார்கோவில் இந்திய திரையுலகிற்கு மிகவும் பயங்கர வில்லனாக அறிமுகமான, கபீர் துஹான் சிங், “கட்டாளன்” படத்தில்,  மீண்டும் கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்துள்ளார். அவருடைய தோற்றமே கதையில் அதிரடியாகவும்  பரபரப்பையும் ஏற்படுத்துவதாகவும்  இருக்கும். அவரது திரை வாழ்க்கையில், இது மறக்கமுடியாத படமாக இருக்கும். 



 



“காந்தாரா” திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத், இப்படத்தின் பின்னணி இசையையும் பாடல்களையும் அமைக்கிறார். காட்டை மையமாகக் கொண்ட கதைக்கு, அவரது இசை மிகுந்த உணர்வையும், பலத்தையும்  சேர்க்கும்.



 



ஷமீர் முகமது ஒளிப்பதிவு செய்ய, கேச்சா கம்பக்டி மற்றும் கலை கிங்ஸன் ஆகியோர் ஆக்ஷன் காட்சிகளை இயக்குகின்றனர். கட்டாளன் திரைப்படம் நாட்டுப்புறக் கதைச்சாரம், உணர்ச்சி, அதிரடி ஆகியவற்றை தகுந்த அளவில் கலந்து, காட்டு வேட்டைக்காரர்களின்  உலகத்தை திரையில் சித்தரிக்கவுள்ளது.



 



கியூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும்  “கட்டாளன்” திரைப்படம், இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை கவரும் வகையில்,  மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா