சற்று முன்

நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்   |    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |    Behindwoods Productions நிறுவனம் யூடுயூபில் வெளியிட்ட 'மூன்வாக்' படத்தின் மினி கேசட்!   |    சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |    டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!   |    'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்   |   

சினிமா செய்திகள்

அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை
Updated on : 07 May 2025

'ஒரு அடார் லவ்' படம் மூலம் வைரல் ஆனவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஆனால் அவர் இப்போது அதைவிட வைரலான தருணத்தில் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது சினிமா வளர்ச்சி, ஆக்டிங் ஸ்டைல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறார். 



 



நடிகர் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில்  அர்ஜூன் தாஸூடன் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. நடிகர் அஜித் மற்றும் அர்ஜூன் தாஸூடன் நடித்தது டபுள் தாமாக்கா என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பவர் ரசிகர்களின் அன்பிற்கு நெகிழ்ச்சியாக நன்றியும் தெரிவித்திருக்கிறார் பிரியா. அடுத்தடுத்தும் இதே போன்று வலுவான திறமையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறுகிறார். நடிப்புக்குத் தீனி போடும் விதமாக 'குட் பேட் அக்லி' படத்தில் அவரது நித்யா கதாபாத்திரம் அமைந்தது. அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக சொல்லி இருப்பவர் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் சொல்கிறார். 



 



இந்தப் படத்தில் இன்னொரு மைல்கல் நடிகை சிம்ரனின் 'சுல்தானா...' பாடலை ரீகிரியேட் செய்து பிரியா நடனமாடியது. சிம்ரன் நடனத்துடன் ஒப்பிடும்போது தன்னுடைய நடனத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என அர்ஜூன் தாஸிடம் தெரிவித்ததாகவும் சொல்கிறார். 



 



மேலும் பிரியா பகிர்ந்து கொண்டதாவது, "அடுத்தடுத்து நான் நடிக்க இருக்கும் படங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்தெடுக்கப் போகிறேன். இயக்குநர் மணி ரத்னம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆக்‌ஷன் ரோலிலும் நடிக்க வேண்டும். சினிமாவில் அடுத்தடுத்து உயரங்கள் தொடுவதுதான் மகிழ்ச்சி.  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதும் என்னுடைய கரியரில் ஒரு பகுதிதான். எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் செய்வதில் முழு கவனம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா