சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!
Updated on : 01 May 2025

பாரம்பரிய மிக்க முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட பட்டு சேலைகளையும் , தூய பருத்தி சேலைகளையும்  விற்பனை செய்து ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வரும்  'துகில்' எனும் நிறுவனத்தின் புதிய கிளை சென்னை- அடையாறில்  தொடங்கப்பட்டிருக்கிறது.  இதனை முன்னணி நட்சத்திர  நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து வைத்ததுடன்  முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். 



 



'துகில்'- அருகி வரும் கைத்தறி ஆடைகளின் மரபை மீட்கும் முயற்சியில் தொழிலதிபர்கள் வர்ஷா மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் சீரிய முயற்சியில் 2022 ஆம் ஆண்டில் இந்த விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தின் அனைத்து தமிழர்களுக்கும் தங்களின் பாரம்பரிய உடையான காஞ்சி பட்டு சேலை, தூய பருத்திச் சேலை, கூறைநாடு சில்க் காட்டன் சேலை, பட்டு வேட்டி போன்ற கலாச்சார உடைகளை பிரத்யேக முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கி, கைத்தறி ஆடைகளின் விற்பனையில் புதிய தடத்தை பதித்து வருகிறது. 



 



' துகில்' நிறுவனத்தின் சிறப்பு அம்சமாக வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் - வடிவமைப்பு - ஆகியவற்றை தேர்வு செய்தாலும்.. அதனையும் அவர்கள் வியக்க வைக்கும் அளவில் நேர்த்தியாகவும் பாரம்பரியத்துடனும் பட்டு சேலைகள்- பருத்தி சேலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.



 



இந்த நிறுவனத்தின் புதிய கிளை மங்கலம் பொருந்திய நன்னாளாம்  அட்சய திருதியை நாளான ஏப்ரல் 30 ஆம் தேதியன்று  சென்னை அடையாறில் உள்ள சாஸ்திரி நகரில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



 



இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனையில் ஈடுபட்டிருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா