சற்று முன்

'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |   

சினிமா செய்திகள்

ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!
Updated on : 01 May 2025

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வெப் சீரிஸ் 'ஹார்ட் பீட்'. இதன் இரண்டாவது சீசன் புரோமோ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். பல எமோஷனலான தருணங்கள், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்புடன் இருப்பதால் 'ஹார்ட் பீட்'டுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. வரவிருக்கும் இரண்டாவது சீசன் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைத் தர இருக்கிறது.



 



ஆர்கே மருத்துவமனையில் மூத்த மருத்துவராக ரீனா 2.0 இருக்கும்படியாக இந்த புரோமோ தொடங்குகிறது. தனது புதிய அணியை மிகவும் கட்டுபாடுடனும் அமைதியாகவும் வழிநடத்துகிறார். ஆனால், இந்த மருத்துவர் உலகத்திற்கு அப்பால் ரீனாவின் பழைய நண்பர்களுடனான அவரது விளையாட்டுத்தனமான நட்புறவையும் இந்த புரோமோ காட்டுகிறது. இப்போது சேர்மனாக இருக்கும் அர்ஜுனுடனான அவளது சிக்கலான உறவு மற்றும் தனது தாயார் டாக்டர் ரதிக்காக ரீனா ஏங்குவது போன்ற விடை தெரியாத கேள்விகளுக்கு இப்போது விடை கிடைக்க இருக்கிறது. பார்வையாளர்களுக்கும் இது உணர்ச்சிகரமான தருணங்களாக அமையும்.



 



கதையின் சீசன் 2 புதிய பயிற்சியாளர் குழுவையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நிலோஃபர் (கனா காணும் காலங்கள் புகழ் அக்ஷதா), கிரண் (சிவம்), மற்றும் கமல் (அப்துல்), ரோஷினி (அமையா) மற்றும் புதிய தலைமை மருத்துவராக டி.எம். கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். ரீனாவாக தீபா பாலு, டாக்டர் ரதியாக அனுமோல், தேஜுவாக யோக லட்சுமி, பாடினி குமார் அனிதாவாகவும், குணாவாக சர்வா, ராக்கியாக சபரீஷ், அர்ஜுனாக சாருகேஷ், நவீனாக ராம், தேவ்வாக சந்திரசேகர், ராமநாதனாக கிரி துவாரகேஷ், தியானேஷ், ரேயா ஆகியோர் நடித்துள்ளனர். 



 



'ஹார்ட் பீட் சீசன் 2'-வை தீபக் சுந்தரராஜன் எழுதி இயக்கியுள்ளார். ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங், சரண் ராகவன் இசையமைத்துள்ளார். இந்தத் தொடரை ஏ டெலி ஃபாக்டரி புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர் ராஜவேலு தயாரித்துள்ளார். ஆர்ஜே. ஷியாம் சுந்தர் நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இந்தத் தொடர் விரைவில் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாக இருக்கிறது. 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா