சற்று முன்

'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |   

சினிமா செய்திகள்

'கிங்ஸ்டன்' திரைப்படம் ஏப்ரல் 13 முதல் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீம் செய்கிறது!
Updated on : 06 April 2025

தமிழின் முன்னணி ஓடிடி தளமான ZEE5  தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற "கிங்ஸ்டன்" திரைப்படத்தை, வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.  இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்த திரில்லர் திரைப்படம், கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்தது. திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற இப்படம், ZEE5 டிஜிட்டல் வெளியீடு மூலம், ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. 



 



'கிங்ஸ்டன்' திரைப்படம், துணிச்சலான கடத்தல்காரரான கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) என்பவனின் கதையை விவரிக்கிறது. உள்ளூர் ரௌடியிடம் வேலை பார்க்கும் கிங்ஸ்டன், அந்த ரௌடி, கிராமத்தை  ஏமாற்றுவதை அறிந்து, அவனுக்கு எதிராகக் களமிறங்குகிறான். தன் கிராமத்தை மீட்கும் பொருட்டு, மீன் பிடிக்க முடியாமல், பல வருடங்களாகச் சபிக்கப்பட்ட கடற்பகுதிக்குள்,  தன் நண்பர்களுடன் துணிந்து நுழைகிறான்.  அந்த சாபத்தின் ரகசியத்தை அவன் கண்டுபிடித்தானா? தன் கிராமத்தை மீட்டானா? என்பது தான் இந்தப்படத்தின் கதை. 



 



ZEE5 இன் SVOD தெற்கு துணைத் தலைவர் லயோட் சேவியர் கூறுகையில், “

தமிழ் சினிமா இப்போது மிகப்பெரிய வெற்றிப்பயணத்தில் இருக்கிறது. அந்த  வகையில், அட்டகாசமான என்டர்டெயினர் திரைப்படமான, "கிங்ஸ்டன்" படத்தை,  எங்கள் பார்வையாளர்களுக்கு  வழங்குவதில் மகிழ்ச்சி.  இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்தப்படம், ஒரு புதுமையான களத்தில், அதிரடி திரில்லராக ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்திற்கு ரசிகர்களைக் கூட்டிச் செல்கிறது. இந்தப்படம் கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும், இது போல் சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்குவோம். 



 



நடிகர்  ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது.., 



"கிங்ஸ்டன் பல வழிகளில் சவாலாக அமைந்த மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரம் - கிங்ஸ்டன்  துணிச்சலானவன், கணிக்க முடியாதவன், இயற்கைக்கு அப்பாற்பட்ட ரகசியங்கள்,  மாய விசயங்களுக்குள் சிக்கிக் கொள்கிறான். தமிழ் சினிமா அரிதாகவே சொல்லும் இந்தக்களத்தில்,  அதிரடி, மர்மம் மற்றும் நாட்டுப்புறக் கதைக்களத்தில் ஒரு புதுமையான கதையை இந்தப்படம் சொல்கிறது. இப்படத்திற்குத் திரையரங்குகளில் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது ZEE5  மூலம் இப்படத்தை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவதைக் காண ஆவலாக உள்ளேன்.  



 



இயக்குநர் கமல் பிரகாஷ் கூறியதாவது..., 



இந்தப் படம் அன்பான குழுவின் உழைப்பு.  மர்மம், அதிரடி மற்றும் ஃபேண்டஸி அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான அனுபவத்தைத் தரும் படைப்பு  இது. இப்படத்தை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது, ஆனால் திரையரங்குகளில் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது.  கிங்ஸ்டன் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷின் உழைப்பு வியக்கதக்கதாக இருந்தது. தன்னை முழுதாக மாற்றிக்கொண்டு, மிகப்பிரமாதமாக, தனித்துவமான நடிப்பைத் தந்தார்.  இந்த வேடத்தில் வேறு யாரையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ZEE5 மூலம் இப்படம் அனைத்து மக்களையும் சென்றடையவுள்ளது, மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் இப்படம் புதுமையான அனுபவத்தைத் தரும். 



 



ஃபேண்டஸி கலந்த இந்த அற்புதமான திரைப்படத்தை,  ZEE5 இல்  பிரத்தியேகமாக ஏப்ரல் 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல்  கண்டு களியுங்கள் !!

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா