சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

4 ஆம் தேதி வெளியாகிறது இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’!
Updated on : 02 April 2025

கிரி கிருஷ்ண கமல் இயக்கியுள்ள, இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ’சாரி’ திரைப்படத்தில் சத்யா யது மற்றும் ஆராத்யா தேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்திரல் நடைபெற்றது. இந்தப் படத்தை ரவிசங்கர் வர்மா, RGV - AARVI புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் தயாரித்துள்ளார். ’சாரி’ திரைப்படம் இந்த மாதம் 4 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 



 



இயக்குநர் கிரி கிருஷ்ண கமல் படம் பற்றி கூறியதாவது, "'சாரி' படத்திற்காக  திறமையான புதிய குழு பணியாற்றியுள்ளது. ராம் கோபால் வர்மா எனக்கு படம் எப்படி உருவாக்குவது என்று ஒருபோதும் சொல்லிக் கொடுக்கவில்லை. இது இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு இடையிலான தீவிர கதைக்களத்தைக் கொண்டது. சத்யா யது மற்றும் ஆராத்யா தேவி படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யா மற்றும் ஆராத்யாவின் கதாபாத்திரம் வழக்கமான படத்தில் வருவது போல இருக்காது. ஆர்ஜிவியுடன் பணிபுரிவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.



 



இசையமைப்பாளர் சஷிப்ரீதம் கூறியதாவது, "’குலாபி’ படத்திலிருந்தே ராம் கோபால் வர்மாவுடன் எனக்கு நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கிறது. ’சாரி’ படத்திற்காக அவருடன் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ராம் கோபால் வர்மாவை அடிக்கடி சந்தித்து பேசுவேன். எனது அனைத்து பாடல்களையும் அவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் என்னை எப்போது அழைத்தாலும் படத்திற்கு இசையமைக்கத் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்கள் நிச்சயம் பார்வையாளர்களை ஈர்க்கும்” என்றார்.



 



இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசியதாவது, “சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவது வாழ்க்கையில் மோசமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ’சாரி’. இந்தப் படத்திற்கான கதையை நான் எழுதியுள்ளேன். நான் எழுதிய ஸ்கிரிப்டை விட இயக்குநர் கிரி கிருஷ்ணா இந்தப் படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். இந்தப் படம் பற்றி நான் அவருடன் விவாதித்தபோது, அவர் சொல்லிய கருத்துகளும் எனக்குப் பிடித்திருந்ததால் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவருக்கு வழங்கினேன். ஒளிப்பதிவாளர் சபரி, இசையமைப்பாளர் சஷிப்ரீதம் மற்றும் எனது முழு அணியினரும் படத்தில் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சபரி தனது காட்சியமைப்புகள் மூலம் படத்தின் மையக்கருவை சரியாக பிரதிபலித்துள்ளார். இசையமைப்பாளர் சஷிப்ரீதமும் இந்தப் படத்திற்கு சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். சுபாஷ் படத்தில் மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். படக்குழுவினரின் பங்களிப்பு என்னை விட அதிகம் என்பது எனக்கு பெருமையான ஒன்று” என்றார். 



 



கதாநாயகி ஆராத்யா தேவி, "'சாரி' படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த ராம் கோபால் வர்மாவுக்கு நன்றி. இந்தப் படம் என்னுடைய கனவு படம். இயக்குநர் கிரி கிருஷ்ண கமல் இந்தப் படத்தில் நடிக்க போதுமான சுதந்திரம் அளித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். சத்யா யது சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். படம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறோம். இந்த மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 'சாரி' படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.





நடிகர் சத்யா யது, "’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக ராம் கோபால் சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் படத்தின் தீவிர கதைக்கருவும் எனது நடிப்பும் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஆராத்யா தேவி நடிப்பு சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தை கொடுத்த ராம் கோபால் வர்மாவுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த மாதம் 4 ஆம் தேதி வெளியாகும் ‘சாரி’ படத்தைப் பார்த்து ஆதரிக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா