சற்று முன்

என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - பேரரசு!   |    தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |    வாரம் ஒரு சினிமாவைக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள் - ராணுவ வீரரும் நடிகருமான காமராஜ்   |    எழுத்தின் பங்கு இல்லாததால் சினிமா சீரழிந்து வருகிறது: இயக்குநர் கதிர் பேச்சு!   |    ஓடிடி தளத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'டார்க் ஃபேஸ்’!   |    பொதுவாக ஈழத் தமிழர்கள் படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும் - சசிகுமார்   |    ஜியோ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 24 முதல் ப்ளாக்பஸ்டர் 'எம்புரான்' ஸ்ட்ரீமாகிறது!   |    ’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!   |    ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் நடிப்பில் 'கலியுகம்' பட வெளியீட்டு தேதி போஸ்டர் வெளியானது!   |    விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' (ACE) ரிலீஸ், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!   |    வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விசயங்கள் நடக்கும் - ‘ரெட்ரோ’ விழாவில் சூர்யா   |    'குபேரா' படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா நண்பா’ வெளியாகியுள்ளது!   |    உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! - கே.ராஜன்   |    இனிய இசை விருந்தாக வெளியாகியுள்ள 'என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச' – மையல் பட மெலோடி!   |    ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ள ’குட் பேட் அக்லி’   |    தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப் படத்தை வெளியிடும் ஹிப் ஆப் ஆதி   |    அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணியில் சாதனைப்படைக்கும் #AA22xA6 !   |    மாஸ்டர் சித்தார்த் பன்னீரின் 'மிஸ் மேல கிரஷ்' பான் இந்திய வீடியோ ஆல்பம்!   |    உங்களுக்குத் தேவையான அத்தனை தீனியும் 'கேங்கர்ஸ்'ல் இருக்கிறது - நடிகர் வடிவேலு   |   

சினிமா செய்திகள்

எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை! - நடிகர் கார்த்தி
Updated on : 01 April 2025

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன்  இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. 



 



நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசுகையில், “சர்தார் பெயர் வைத்ததிலிருந்தே அந்தப்படத்தின் மீது, எனக்கு நிறைய பிரியம் இருந்தது. நம் கிராமத்தில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து, அவனுக்கு டிரெய்னிங் தந்து,  உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். இது உண்மையில் நடந்தது.  அதை அருமையான கதையாக்கி படமெடுத்தார் மித்ரன். இப்போது அந்த பாத்திரம் திரும்ப வருவது மகிழ்ச்சி. எல்லோரும் முதன் முறையாக ஒரு உளவாளி தனக்காக இல்லாமல், நாட்டுக்காக போராடுகிறான்  என இந்தப்படத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப்படத்தில் இன்னும் பெரிய போரை நடத்தவுள்ளார் சர்தார். அதிலும் எஸ் ஜே சூர்யா சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. மித்ரன் மிகப்பிரம்மாண்டமாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். செட்டில் போய்ப் பார்க்கும் போது அவ்வளவு பிரமிப்பாக இருக்கும், அத்தனை செலவு செய்துள்ளார்கள். லக்‌ஷ்மன் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.  இன்றைய காலகட்டத்தில் படத்திற்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டியது தயாரிப்பாளரின் கடமையாக ஆகிவிட்டது. எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை இதிலும் அசத்தியுள்ளார். சாம் சி எஸ் கைதிக்கு பிறகு அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். படம் உங்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தும். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம் நன்றி.” என்றார்.



 


இயக்குநர் பி.எஸ்.மித்ரன்  பேசுகையில், “முதன் முதலில் சர்தார் எடுக்கும்போது சர்தார் எப்படி இருக்க வேண்டும் என்பது என் மனதில் இருந்தது. கார்த்திக்கு மேக்கப் போட்டு முதல் சீன் எடுக்கும்போதே, இந்த கேரக்டர் நிறைய கதை சொல்ல முடியும் என்று தோன்றியது. அப்போதே இந்தப் பயணம் துவங்கிவிட்டது. இந்தப்படம் சர்தார் ப்ரீக்குவல் மற்றும் சீக்குவல் என இரண்டாகவும் இருக்கும். சர்தாரின் ப்ளாஷ்பேக்கில் இந்தக் கதை நடக்கும். இது மிகப்பெரிய கேன்வாஸில் உருவாகும் படம். அதற்கு லக்‌ஷ்மன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சர்தாரில் கார்த்தி சாரை பாடாய்படுத்தினோம், அதைத் தாண்டியும் மீண்டும் மேக்கப் போட்டு இந்தப்படத்திற்கு வந்ததற்கு நன்றி. இந்த ஃபர்ஸ்ட் லுக், சர்தாரில் யாரை எதிர்க்கப் போகிறார் என்பதை அறிமுகப்படுத்ததத் தான். எஸ் ஜே சூர்யா சார் கதை கேட்டு முடிக்கும் முன்பே ஒத்துக்கொண்டார். இதில் அசத்தியுள்ளார். படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.



 



தயாரிப்பாளர் லக்‌ஷ்மன் குமார் பேசுகையில், “இறைவனுக்கு வணக்கம், சர்தார் முடித்தபோது அதன் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கலாம் என ஹீரோவும் இயக்குநரும் முடிவு செய்தார்கள், அப்போது மித்ரன் என்னிடம் ஒரு கதை சொன்னார். இது பெரிய கேன்வாஸில் இருக்கும் ஓகேவா என்றார். சர்தார் படம் கார்த்தி கேரியரில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அதற்காக அவர் கடுமையாக உழைத்திருந்தார். அதனால் இது பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என உடனே ஓகே சொன்னேன். சர்தார் மேக்கப் போடவே அவ்வளவு நேரம் கஷ்டப்பட்டார். இதற்காக கார்த்தி இன்னும் கடுமையாக உழைத்துள்ளார். மித்ரன் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். உங்களுக்கு இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசரை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறோம் நன்றி.” என்றார்.



 



நடிகர் எஸ் ஜே சூர்யா பேசுகையில், “’சர்தார் 2’ஒரு ரிமார்க்கபிள் படம், மித்ரன் சார் வந்து கதை சொன்ன போதே, மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் கேரக்டர் மிக வித்தியாசமாக இருந்தது. நம்ம நேட்டிவிட்டியுடன் இன்டர்நேஷனல் தரத்தில் நம் மக்களுக்கு புரிகிற மாதிரி, மிக அழகாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். இறைவன் நல்ல நல்ல டைரக்டராக எனக்குத் தருகிறான். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும் எனும் நம்பிக்கை இருக்கிறது. 3 அற்புதமான மனிதர்கள், கார்த்தி சார், அவர் என்ன சொன்னாலும் நடத்திக் காட்டும் தயாரிப்பாளர், தரமாக உழைக்கும் இயக்குநர் மூவரும் மிகச்சிறந்த மனிதர்கள். கார்த்தி சாரிடம் உள்ள ஸ்பெஷல், மூளை மனதிற்கு தடையில்லாமல் அவரிடம் வார்த்தைகள் வரும். மிக நல்ல மனதுக்காரர். அந்த மேக்கப் போடவே நாலு மணி நேரம் ஆகும், அதை பொறுத்துக் கொண்டு உழைத்துள்ளார். அவருக்கு இது பெரிய வெற்றி தரும், அனைவருக்கும் நன்றி.” என்றார்.



 



இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசுகையில், “இது மிகப்பெரிய மேடை, 10 வருடம் முன் இந்த இடத்தில் மித்ரன் என்னிடம் சர்தார் கதையைச் சொல்லியுள்ளார். அவர் எப்போதும் ஹாலிவுட் தரத்தில், நம் கதையை சொல்லும் இயக்குநர் அவருடன் படம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. தூக்கத்தில் எழுப்பினாலும் ஸ்பை திரில்லருக்கு இசையமைப்பேன், எனக்கு பிடித்த ஜானர்.  கார்த்தி சாருடன் கைதி படத்திற்கு பிறகு வேலை பார்க்கிறேன். மிகத் தனித்துவமான திறமைசாலி. அவரிடம் எப்போதும் தான் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவு இருக்கும். இந்தப்படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. பிரின்ஸ் பிக்சர்ஸ் என் குடும்பம் மாதிரி. இவர்களுடன் பல ஜானர்களில் வேலை பார்த்துள்ளேன்.  இன்னும் பல படங்கள் பணியாற்ற வேண்டும். இந்தப்படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா