சற்று முன்

ஆக்சன்-திரில்லர் திரைப்படம் ‘மாஸ்க்’ ஜனவரி 9, 2026 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!   |    ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது   |    நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான் - இயக்குநர் நாராயணன்   |    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'த்ரிபின்னா' இந்திய சிம்பொனி!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” கன்னட பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் 'செவல காள'   |    நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது   |    5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த 'சிக்மா' திரைப்பட டீசர்   |    களைகட்டும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்!   |    விஜய் சேதுபதிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வைரல்!   |    Behindwoods Productions நிறுவனம் யூடுயூபில் வெளியிட்ட 'மூன்வாக்' படத்தின் மினி கேசட்!   |    சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |   

சினிமா செய்திகள்

திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!
Updated on : 03 March 2025

ரசிகர்கள் விரும்பும்படியான பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் விஜய் ‘D Studios Post’ என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவினை மார்ச் 2 அன்று தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோவை இயக்குநர் பிரியதர்ஷன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் & வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி ஆகிய பிரபலங்கள் தொடங்கி வைத்தனர்.



 



இந்த நிகழ்வு சென்னையின் மிகப்பெரிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவின் பிரமாண்டமான தொடக்க விழா என்பது குறிப்பிடத்தக்கது. டிஐ, டால்பி அட்மாஸ் சவுண்ட் மிக்ஸ், டப்பிங், டிசிபி (DCP), ஓடிடி மாஸ்டரிங், விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐடி (DIT) ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கான ஒரே இடமாக இந்த போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோஸ் உள்ளது. இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.



 



நிகழ்வுக்கு வந்த விருந்தினர்களை தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் வரவேற்றார். இந்த ஸ்டுடியோவின் நிறுவனர் மற்றும் தலைவர் இயக்குநர் விஜய். ராஜகிருஷ்ணன், ஹெட் ஆஃப் சவுண்ட், ராஜசேகரன் விஷுவல் பிரிவின் தலைவராகவும், முத்துகிருஷ்ணன் குரல் பிரிவின் தலைவராகவும் உள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா