சற்று முன்

'டெஸ்ட்' படத்தில் குமுதாவாக அறிமுகமாகும் நடிகை நயன்தாரா!   |    நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது   |    கிரிக்கெட் வீரர் ஆர் அஸ்வின் அறிமுகப்படுத்திய நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம்!   |    அசத்தலான காமெடி சீரிஸாக 'செருப்புகள் ஜாக்கிரதை' மார்ச் 28 முதல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது   |    சினிமா எடுப்பதும், சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம் - நடிகர் ராதாரவி   |    நாயகியாக 'பிக் பாஸ்' புகழ் ஆயிஷா ஜீனத் நடிக்கும் புதிய படம்!   |    சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'வருணன்- காட் ஆஃப் வாட்டர்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு!   |    இலங்கை இந்திய நாட்டு கலைஞர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாகும் 'அந்தோனி'   |    54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |   

சினிமா செய்திகள்

ஜெய் நடிக்கும் புதிய படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது!
Updated on : 03 March 2025

BV Frames நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு,  இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. 



 



முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இந்த புதிய திரைப்படத்திற்கு, தனது பாராட்டுக்களை தெரிவித்து, படக்குழுவினரை வாழ்த்தினார்.



 



இப்படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டு அடித்து இயக்குநர் சசி, கேமராவை ஆன் செய்து படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 



 



முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மிக முக்கிய சமூக பிரச்சனை ஒன்றை, காதலும் திரில்லரும் கலந்து,  கமர்ஷியல் அம்சங்களுடன் ரசிகர்கள் விரும்பும் படைப்பாக உருவாக்கவுள்ளார். 



 



பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம், ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரிய மாற்றங்கள், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி, இப்படம் பேசவுள்ளது. காதலும் களவும் என்ற அன்பின் ஐந்திணையைக் கொண்டு அழகான வாழ்வியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது. 



 



இப்படத்தில் முன்னணி நட்சத்திரம் ஜெய் நாயகனாக நடிக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். 



 



இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட்சன்,  கலை இயக்கம் S கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை  V. சிவராமன், உடை வடிவமைப்பு கமலி S மற்றும் P. செல்வம், மேக்கப் அப்துல் ரசாக் மற்றும் அப்துல் ரஷீத், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி.G ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள். 



 



இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நெல்லூர் போன்ற இடங்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 



 



இப்படத்தின் பங்குபெறும் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூரவமாக வெளியாக இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா